Rashmika Mandanna : புஷ்பா பட விழாவில் கருப்பு சேலையில் ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா மந்தனா...

Kanmani P   | Asianet News
Published : Dec 14, 2021, 12:31 PM IST

Rashmika Mandanna : சமீபத்தில் நடந்த புஷ்பா பட விழாவில் கலந்து கொண்ட நாயகி ராஷ்மிகா மந்தனா சீவ் லெஸ் பிளவ்ஸுடன் கருப்பு நிற சேலை அணிந்து வந்திருந்தது ரசிகர்களை கண்கோட்டாமல் பார்க்க வைத்தது.

PREV
112
Rashmika Mandanna : புஷ்பா  பட விழாவில்  கருப்பு  சேலையில்  ரசிகர்களை கவர்ந்த ராஷ்மிகா மந்தனா...
rashmika mandanna

தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். 

212
Rashmika Mandanna

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள  'புஷ்பா " படம் வெளியாக உள்ளது. 

312
Rashmika Mandanna

புஷ்பா படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள சாமி சாமி பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா தனது தனித்திறமையை அழகாக வெளிப்படுத்தியிருந்தார்.

412
Rashmika Mandanna

மூன்றாவது சிங்கிளாக வெளியான "சாமி சாமி" பாடல் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் இதுவரை - 250 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

512
Rashmika Mandanna

இதற்கிடையே  ராஷ்மிகா தான் நடித்துள்ள புஷ்பா படத்திலிருந்து வெளியாகியுள்ள சாமி சாமி பாடலுக்கு நடமாடியுள்ள வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வந்தது.


 

612
Rashmika Mandanna

இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் ராஷ்மிகா, அல்லு அர்ஜுன் என படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

712
Rashmika Mandanna

தென்னிந்திய அழகி ரஷ்மிகா மந்தனா தனது வரவிருக்கும்  புஷ்பா: தி ரைஸ் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் அனைவரது பார்வையையும் தன்பக்கம் திருப்பினார். 

812
Rashmika Mandanna

2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்துவிட்டார்.

912
Rashmika Mandanna

கடந்த 2018ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து இவர் நடித்த தெலுங்கு திரைப்படமான 'கீதா கோவிந்தம்' திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களையும் அதிகமாகவே கவர்ந்து விட்டது.

1012
Rashmika Mandanna

அதனைத் தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் எல்லாம் நடித்து, இளசுகளின் கனவு கன்னியாக மாறிவிட்டார்.

1112
Rashmika Mandanna

இவர்கள் இருவருக்குள்ளும் காதல் துளிர் விட்டு பொங்கி வழிந்து கொண்டிருப்பதாக சில கிசுகிசுக்கள் எழுந்து வந்தாலும், இருவருமே தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்கள்.

1212
Rashmika Mandanna

இது ஒரு புறம் இருந்தாலும், தொடர்ந்து தான் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகாவுக்கு பாலிவுட் திரையுலகிலும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.

Read more Photos on
click me!

Recommended Stories