Rashmika Mandanna : தளபதி 66 பட பூஜையில் நடிகர் விஜய்யை வெட்கப்பட வைத்த ராஷ்மிகா... வைரலாகும் கியூட் கிளிக்ஸ்

Published : Apr 06, 2022, 02:16 PM IST

Rashmika Mandanna : டோலிவுட் முதல் பாலிவுட் வரை நடித்திருந்தாலும், நடிகை ராஷ்மிகாவுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது விஜய் தான், அவருடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என பல்வேறு பேட்டிகளில் வெளிப்படையாக கூறி இருக்கிறார் ராஷ்மிகா.

PREV
15
Rashmika Mandanna : தளபதி 66 பட பூஜையில் நடிகர் விஜய்யை வெட்கப்பட வைத்த ராஷ்மிகா... வைரலாகும் கியூட் கிளிக்ஸ்

கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ராஷ்மிகா. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கடந்த 2018-ம் ஆண்டு இவர் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம், இவரை இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது. இதையடுத்து இவர்கள் நடிப்பில் வெளியான டியர் காம்ரேட் படமும் வேறலெவல் ஹிட் அடித்தது.

25

பின்னர் நாகார்ஜுனா, நானி, மகேஷ்பாபு, நிதின் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே நட்சத்திர ஹீரோயினாக உயர்ந்தார். இவரது நடிப்புக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளதால் பிறமொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் இவர் கடந்தாண்டு வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.
 

35

இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம், இவரை பான் இந்தியா நடிகையாக உயர்த்தியது. தற்போது பாலிவுட்டில் 3 படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் மிஷன் மஜ்னு என்கிற படத்தில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ராஷ்மிகா, இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதுதவிர அமிதாப் பச்சனுடன் ஒரு படத்திலும் ரன்பீர் கபூருடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

45

டோலிவுட் முதல் பாலிவுட் வரை நடித்திருந்தாலும், நடிகை ராஷ்மிகாவுக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது விஜய் தான், அவருடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என பல்வேறு பேட்டிகளில் வெளிப்படையாக கூறி இருக்கிறார் ராஷ்மிகா.

55

தற்போது அவரது கனவு நனவாகி உள்ளது. விஜய் நடிப்பில் தயாராக உள்ள தளபதி 66 படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ராஷ்மிகா. இன்று இப்படத்திற்கு பூஜை போடப்பட்டது. அதில் கலந்துகொண்ட ராஷ்மிகா, நடிகர் விஜய்யை பார்த்ததும் துள்ளிக்குதித்துள்ளார். மேலும் அவரிடம் பேசுகையில் நீங்க ரொம்ப ஹேண்ட்சம்மா இருக்கீங்க சார் என சொல்லி நடிகை ராஷ்மிகா சுத்திபோட, இதைப் பார்த்து வெட்கப்பட்டு சிரித்துள்ளார் விஜய். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... RK Selvamani : சர்ச்சை பேச்சால் வந்த சிக்கல்... இயக்குனர் ஆர்.கே செல்வமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது கோர்ட்

Read more Photos on
click me!

Recommended Stories