தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர்போன நடிகர்கள் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் அதில் நடிகர் சிம்புவுக்கு தனி இடம் உண்டு. நடிகைகளுடன் காதல், ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவது என சிம்பு சினிமாவில் சந்தித்த சர்ச்சைகள் ஏராளம். ஆனால் அவரை சினிமாவில் அறிமுகப்படுத்திய அவரது தந்தை டி ராஜேந்தர் அதற்கு அப்படியே எதிரானவர். சினிமாவில் மிஸ்டர் கிளீன் என சர்டிபிகேட் கொடுத்தால் அதில் டி ராஜேந்தருக்கு தான் கொடுக்க வேண்டும்.
ஏனெனில் இவர் அந்த அளவுக்கு ஜென்டில்மேனாக இருந்திருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் மீடூவில் புகார் கூறும் நடிகைகள் பலரும் டி ராஜேந்தரை போல ஒரு அற்புதமான மனிதரை பார்க்கவே முடியாது என வியந்து பாராட்டுகின்றனர். நடிகைகளை தொட்டு கூட நடிக்க மாட்டார்.