
தமிழ் சினிமாவில் பல மாஸ்டர் பீஸ் படங்களை இயக்கி ரசிகர்களால் தலையில் தூக்கிவைத்து கொண்டாடப்பட்ட இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். இவர் மண்வாசனை, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை என ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கில்லாடியான பாரதிராஜா, சினிமாவில் ஏராளமான நடிகைகளையும் அறிமுகம் செய்துவைத்துள்ளார்.
அந்த வகையில் அவரால் அறிமுகம் செய்யப்பட்ட ராதா, ராதிகா, ரேவதி, ரேகா போன்ற நடிகைகள் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்களாக கோலோச்சினர். அதுமட்டுமின்றி தான் அறிமுகம் செய்யும் நடிகைகளுக்கு R என்கிற எழுத்தில் பெயர் வைக்கும் பழக்கத்தையும் அவர் கொண்டிருந்தார். அவர் பெயர் மாற்றாத ஒரே ஹீரோயின் என்றால் அது நடிகை பிரியாமணி தான். பாரதிராஜா இயக்கிய கண்களால் கைதுசெய் படம் மூலம் பிரியாமணி அறிமுகமானார்.
இதுமட்டுமின்றி பாரதிராஜா பாலோ பண்ணிய மற்றொரு சென்டிமெண்டும் உண்டு. அவர் கையால் அடிவாங்காத நடிகைகளே இல்லை என சொல்லம். இன்றைய காலகட்டத்தில் ஒரு நடிகையை இயக்குனர் அடித்துவிட்டால் எவ்வளவு பெரிய பிரச்சனை ஆகும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அன்றைய காலகட்டத்தில் பாரதிராஜா அடிக்கமாட்டாரா என ஏங்கிய நடிகைகள் ஏராளம். அவர் அடித்தால் அந்த நடிகைகள் உச்சத்துக்கு சென்றுவிடுவார்கள் என்று பலரும் நம்பினர். அப்படி பாரதிராஜா கையால் அடிவாங்கிய நடிகைகள் பற்றி பார்க்கலாம்.
நடிகை ராதிகாவை கிழக்கே போகும் ரயில் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. இந்த படம் அவரது திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. படம் முழுக்க தொட்டாச்சினுங்கி போல் அழுதுகொண்டே இருக்கும் கேரக்டரில் தான் நடித்திருந்தார் ராதிகா. அவருக்கு அழுகை வர வைக்க டப்பா டப்பாவாக கிளிசரின் போட்டும் வேலைக்கு ஆகவில்லையாம். இதனால் டென்ஷன் ஆன பாரதிராஜா பளார் என அறைவிட்டிருக்கிறார். அதன்பின்னர் ராதிகாவுக்கு கண்ணீர் தாரை தாரையாக ஊற்றி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... எங்க போனாலும் ஸ்கூல் பையன் மாதிரி பேக் மாட்டிக்கொண்டே சுற்றும் பாலய்யா - அதில் இப்படி ஒரு மேட்டர் இருக்கா?
அதேபோல் நடிகை ஸ்ரீதேவியும் பாரதிராஜா கையால் அடிவாங்கி இருக்கிறார். பாரதிராஜா இயக்கத்தில் ஸ்ரீதேவி நடித்த படம் 16 வயதினிலே. இப்படத்தில் அவர் நடித்த மயிலு கேரக்டர் அவருக்கு ஒரு அடையாளமாகவே மாறியது. அதில் தன்னுடைய காதலனான சத்யஜித் தன்னைவிட்டு பிரிந்து செல்லும் காட்சியில் ஸ்ரீதேவிக்கு அழுகை வரவில்லையாம். இதனால் ஒரு அறை வாங்கி இருக்கிறார் ஸ்ரீதேவி.
ரேவதி ஹீரோயினாக அறிமுகமான படம் மண்வாசனை. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் போது நடிகை ரேவதிக்கு வெறும் 16 வயசு தானாம். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணீர் விட்டு அழவேண்டிய காட்சியில் ரேவதிக்கு அழுகையே வராததால் அவருக்கு கன்னத்தில் பளார் என அறைவிட்டிருக்கிறார் பாரதிராஜா. அந்த அறை தான் இன்று நான் முன்னணி நடிகையானதற்கு காரணம் என நடிகை ரேவதியே பேட்டிகளில் கூறி உள்ளார்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த மற்றுமொரு மாஸ்டர் பீஸ் திரைப்படம் தான் கடலோரக் கவிதைகள். இப்படத்தில் சத்யராஜ், ரேகா ஆகியோர் நடித்திருந்தனர். நடிகை ரேகாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய படமும் இதுதான். இப்படத்தில் அவர் நடித்த ஜெனிபர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கும்போது பாரதிராஜா தன்னை அறைந்ததால் கோபித்துக்கொண்டாராம் ரேகா. பின்னர் அவரை சமாதானப்படுத்தி தான் அந்த காட்சியை படமக்கினார்களாம்.
பருத்திவீரன் படம் மூலம் தேசிய விருது வாங்கியவர் பிரியாமணி, அவரையும் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. அவர் இயக்கிய கண்களால் கைதுசெய் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் பிரியாமணி. இப்படத்தில் பாரதிராஜாவிடம் அடிவாங்க கூடாது என்கிற இலக்கோடு நடித்துவந்த பிரியாமணிக்கும் ஒரு கட்டத்தில் அடி விழுந்ததாக அவரே பேட்டியில் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... திருமணம் செய்வதில் வனிதாவுக்கே டஃப் கொடுத்த பிரபல நடிகை!! அதுக்குன்னு இத்தனை தடவையா!