
பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் (Ranya Rao) , கடந்த மார்ச் 3 ஆம் தேதி மாலை, துபாயில் இருந்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது, அவரிடம் நடத்திய சோதனையில், ரன்யா ராவ் 14 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவரிடம் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், தற்போது ரன்யா அவரது வளர்ப்பு தந்தையான மாநில காவல்துறை உள்துறை வாரிய நிர்வாக இயக்குநரும், டிஜிபியுமான ராமச்சந்திர ராவ், தனது அரசு காரில் பலமுறை விமான நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று இறக்கிவிட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதால், இந்தச் சூழலில், அவரது தந்தை தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, அரசு வாகனத்தில் தங்கத்தை எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது தொடர்பாக அவரிடமும், அரசு வாகனத்தை ஓட்டி செல்லும் காவலரிடமும் கூடிய விரைவில் டிஆர்ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என கூறப்படுகிறது.
இந்த விசாரணையில் ரன்யா கூறுகையில், "துபாயில் இதற்க்கு முன் எனக்கு அறிமுகம் இல்லாத ஒரு நபர், தன்னிடம் தங்கத்தை கொடுத்து, கெம்பேகவுடா விமான நிலைய சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல் அருகே ஒரு ஆட்டோவில் வைக்கச் சொன்னதாக டிஆர்ஐ விசாரணையின் போது கூறியிருந்தார். எனவே, விமான நிலையத்திலிருந்து அவர்களை அழைத்துச் செல்ல வந்த நபரைப் பற்றிய தகவல்கள் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது.
தங்கக் கடத்தல் வழக்கு: நீதிமன்றத்தில் கதறி அழுத நடிகை ரன்யா ராவ்!
மேலும் மார்ச் 3 ஆம் தேதி மாலை 7 மணிக்கு துபாயிலிருந்து விமானம் மூலம் வந்த ரன்யாவை அழைத்துச் செல்ல ஒரு தனியார் கார், விமான நிலையத்திற்குச் சென்றிருந்தது. இருப்பினும், ரன்யா கைது செய்யப்பட்ட பிறகு, அந்த கார் ஓட்டுநரை தொடர்பு கொள்ள முடியாததால், டிஆர்ஐ அவரைத் தேடி வருகிறார்கள்.
அதே போல் மாநில காவல் துறையில் டிஐஜி நிலைக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு இரண்டு கார்கள் மற்றும் ஒரு பைக்கை வழங்குகிறது. உணவு டெலிவரி செய்தல், தபால் வேலை செய்தல் மற்றும் வங்கி போன்ற பிற பணிகளுக்கும் இரு சக்கர வாகனத்தை அவர்கள் பயன்படுத்தலாம். ஒரு காரை அதிகாரி பயன்படுத்துகிறார். மற்றொன்று அவரது வீடு அல்லது அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கூடுதல் காரை அதிகாரியின் குடும்பத்தினர் பயன்படுத்துவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ஓட்டுநர்கள் தங்கள் அதிகாரிகளுக்கு பயந்து அவர்களின் பிள்ளைகள் காரில் கொண்டு வரும், பைகள் அல்லது சூட்கேஸ்களை எப்போதும் திறந்து பார்க்க மாட்டார்கள். எனவே, ரன்யாவை விமான நிலையத்தில் ஏற்றி இறக்கச் சென்ற ஓட்டுநர்களுக்கும் தங்கம் அனுப்பப்பட்டது குறித்த தகவல் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தங்க கடத்தலை ஒப்பு கொண்ட பிறகும் கூட ரன்யா தன்னுடைய சிறை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் முரண்பாடான சில விஷயங்களை கூறியுள்ளார். 'தங்கக் கடத்தல் சட்டத்தில் நான் ஈடுபடவில்லை.' நடிகை ரன்யா ராவ், யாரையோ பாதுகாக்க தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. தங்கக் கடத்தல் வழக்கில் டிஆர்ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ், பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் உள்ளார். முன்னதாக, அடையாளம் தெரியாத ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் துபாயிலிருந்து தங்கத்தை கொண்டு வந்ததாக அவர் டிஆர்ஐ விசாரணையின் போது கூறியதாகவும், ஆனால் இப்போது அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறி பதிலளித்துள்ளதாகவும் தெரிகிறது.
மேலும், சிறைத்துறை அதிகாரிகள் ரன்யா ராவின் கடிதத்தை டிஆர்ஐக்கு அனுப்பியுள்ளனர். இருப்பினும், சிறைத்துறை அதிகாரிகள் இந்தக் கடிதத்தை உறுதிப்படுத்தவில்லை. நான் ரியல் எஸ்டேட் வேலைக்காக துபாய் சென்றேன். மார்ச் 3 ஆம் தேதி நான் அங்கிருந்து திரும்பியபோது, தங்கம் எதுவும் கொண்டு வரவில்லை. ஆனால் ஒருவரைப் பாதுகாப்பதற்காக, சிலர் என் மீது தங்கக் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். இந்த விவகாரத்தை விசாரித்து நீதியை உறுதி செய்யுமாறு சிறை அதிகாரிகளிடம் ரன்யா கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.