சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்த ரியோ ராஜ் நடிப்பில், நேற்று வெளியான 'ஸ்வீட் ஹார்ட்' படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருந்த நிலையில், இந்த படம் இவர்களை காப்பாற்றியா? இல்லையா என்பது பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு வாரமும், சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு 5-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகின்றன. பெரிய படங்கள் ரிலீஸ் ஆகும் போது, சிறிய படங்கள் இரண்டு வாரங்களுக்கு ரிலீஸ் ஆக தயக்கம் காட்டுவதாலும், திரையரங்கம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதாலும்... தற்போது வாரத்திற்கு 8- 9 படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதில் ஒரு படம் தேறுவதே பெரிய விஷயம் என கூறலாம்.
24
Recent Time Hit Movies
கடந்த 3 மாதத்தில் வெளியான படங்களில், ட்ராகன், குடும்பஸ்தன், போன்ற சில படங்கள் மட்டுமே நல்ல வரவேற்பை பெற்றது இதற்க்கு மிகப்பெரிய உதாரணம் எனலாம். அதே நேரம் பெரிய பட்ஜெட் படங்களாக வெளியான, விடாமுயற்சி, கேம் சேஞசர் போன்ற படங்கள் பெரிய தழுவியது. இந்நிலையில், நேற்றைய தினம் ஸ்வீட் ஹெர்ட், பெருசு, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் போன்ற உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆனது.
இதில் 'ஜோ' படம் மூலம், ரசிகர்களை கவர்ந்த, ரியோ ராஜின் 'ஸ்வீட் ஹார்ட்' திரைப்படமும் ஒன்று. காதல் மற்றும் காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை, யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். அது மட்டும் இன்றி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எதுவும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை என்றாலும், BGM அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.
44
Sweet Heart Day 1 collection
அதே போல் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் ஸ்வீட் ஹார்ட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் நாளில் மட்டும் இந்த திரைப்படம், ரூ.75 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாம். இந்த வசூல் மிகவும் குறைவு என்றாலும்... சனி - ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.