விமல் ஹீரோவாக நடித்துள்ள சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் 'ஓம் காளி ஜெய் காளி' OTT ரிலீஸ் அப்டேட்!

Published : Mar 15, 2025, 11:00 AM IST

விமல் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதையை மையப்படுத்தி நடித்த 'ஓம் காளி ஜெய் காளி' வெப் சீரிஸ் எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது.  

PREV
14
விமல் ஹீரோவாக நடித்துள்ள சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் 'ஓம் காளி ஜெய் காளி' OTT ரிலீஸ் அப்டேட்!

நடிகர் விமல் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு விமல் நடித்த 'போகுமிடம் வெகு தூரமில்லை' என்ற படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. போகுமிடம் வெகு தூரமில்லை படத்துக்கு பிறகு, போஸ் வெங்கட் இயக்கத்தில் 'சார்' படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றதை விட, விமர்சன ரீதியாக பாராட்டை குவித்தது. 

24
சூப்பர் நேச்சுரல் த்ரில்லர்

பின்னர் 6 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட, 'படவா' படம் சமீபத்தில் வெளியாகி, கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படங்களைத் தொடர்ந்து, தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறார். சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்த வெப் தொடருக்கு 'ஓம் காளி ஜெய் காளி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தோர் மார்ச் 28ஆம் தேதி, ஜியோ ஹாட்ஸ்டாரில்  ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. 

6 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வரும் படவா! விஷால் போல் விமல் சாதனை படைப்பாரா?

34
. பழிவாங்கும் கதைக்களத்தில் 'ஓம் காளி ஜெய் காளி'

ஏற்கனவே 'ஓம் காளி ஜெய் காளி' வெப் தொடரின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இது MLA வேட்பாளரின் கொலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வெப் சீரிஸீல் ஹீரோ முக்கிய குற்றவாளிகளில் ஒருவர். மேலும், விமல் இரட்டை வேடங்களில் முதல் முறையாக நடித்துள்ளார். பழிவாங்கும் கதைக்களத்தில் இந்த சீரிஸ் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுளள்து. இந்த சீரிஸில் விமல் உடன் இணைந்து, புகழ், கருப்பு, ராமு செல்லப்பா, பவானி ரெட்டி, டக்ளஸ் குமாரமூர்த்தி, இளங்கோ குமரவேல் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

44
விமல் நடிக்கும் ஓம் காளி ஜெய் காளி வெப் தொடர் ரிலீஸ் தேதி

ஓம் காளி ஜெய் காளி வெப் சீரிஸை இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கியுள்ளார். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் கேஎல் எடிட்டிங் செய்துள்ளார். ஓம் காளி ஜெய் காளி விமலின் 2ஆவது வெப் சீரிஸ். இதற்கு முன்னதாக ஜீ5 ஓடிடியில் வெளியான விலங்கு வெப் சீரிஸீல் நடித்திருந்தார். தற்போது விமல் நடிப்பில் பரமசிவன் ஃபாத்திமா மற்றும் பெல்லடோனா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில், பரமசிவன் ஃபாத்திமா படத்தின் டிரைலர் வெளியாகியிருக்கிறது.

கடன் வாங்கிக்கொண்டு டிமிக்கி கொடுக்க நினைத்த விமல்! செக் வைத்த உயர்நீதிமன்றம் - அதிரடி தீர்ப்பு!

click me!

Recommended Stories