இதனை விசாரித்த நீதிமன்றம், ஜதின் ஹுக்கேரி மீது மார்ச் 24 வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தீர்ப்பு வழங்கியது. கர்நாடக மாநில அரசு, இந்த வழக்கின் சிறப்பு விசாரணைக்கான குழுவை அமைத்து, டிஜிபி ராமசந்திர ராவை விசாரித்துள்ளது. ரன்யா ராவின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தங்கக் கடத்தலில் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறியவே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த விசாரணை அறிக்கை இரண்டு நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.