சிம்பிளாக நடந்து முடிந்தது ஆலியாபட் - ரன்பீர் கபூர் திருமணம்! இணையத்தை கலக்கும் காதல் ஜோடியின் கல்யாண போட்டோஸ்

Published : Apr 15, 2022, 09:10 AM ISTUpdated : Apr 15, 2022, 09:11 AM IST

Ranbir Alia wedding pics : திருமணத்தை எளிமையாக நடத்தினாலும், விரைவில் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி முடிவு செய்துள்ளதாம்.

PREV
17
சிம்பிளாக நடந்து முடிந்தது ஆலியாபட் - ரன்பீர் கபூர் திருமணம்! இணையத்தை கலக்கும் காதல் ஜோடியின் கல்யாண போட்டோஸ்

பாலிவுட்டில் முன்னணி சினிமா நட்சத்திரங்களாக வலம் வரும் ஆலியா பட்டும், நடிகர் ரன்பீர் கபூரும் பிரம்மாஸ்திரா படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டனர். இவர்களது திருமணம் நேற்று நடைபெற்றது. 

27

மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள நடிகை ஆலியா பட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

37

திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிந்துள்ள ஆலியா பட், 5 ஆண்டுகளாக தாங்கள் ஒன்றாகவே நேரத்தை செலவழித்த பால்கனியிலேயே தங்களது திருமணம் நடைபெற்றதாக நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளார்.

47

5 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

57

ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணத்தில் கரீனா கபூர், கரிஷ்மா கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும், தொழிலதிபர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

67

திருமணத்தை எளிமையாக நடத்தினாலும், விரைவில் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி முடிவு செய்துள்ளதாம்.

77

அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள உச்ச நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... கியூட் நயன்தாரா... ஹாட் சமந்தாவுடன் குத்தாட்டம் போட்ட விஜய் சேதுபதி - வைரலாகும் டூடூடூ பாடல் கிளிம்ப்ஸ்

click me!

Recommended Stories