Priya Bhavani shankar : உள்ளாடை சைஸ் என்ன... அத்துமீறிய நெட்டிசனுக்கு தரமான பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்

Published : Apr 14, 2022, 10:55 AM IST

Priya Bhavani shankar : நேற்று இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய பிரியா பவானி சங்கர், அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார். 

PREV
14
Priya Bhavani shankar : உள்ளாடை சைஸ் என்ன... அத்துமீறிய நெட்டிசனுக்கு தரமான பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கர்

செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் பிரியா பவானி சங்கர். இதுவரை இவர் நடித்த படங்கள் அனைத்தும், போட்ட முதலுக்கு மோசமின்றி வசூல் செய்துள்ளதால் கோலிவுட்டின் ராசியான நாயகி என்கிற அடையாளத்தோடும் பார்க்கப்பட்டு வருகிறார்.

24

தமிழில் இவர் கைவசம் ராகவா லாரன்ஸின் ருத்ரன், தனுஷுடன் திருச்சிற்றம்பலம், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பொம்மை, ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யுடன் யானை உள்பட ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கும் வெப் தொடர் ஒன்றில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
 

34

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர், நேற்று இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட ஏராளமான கேள்விகளுக்கு பதிலளித்தார். வழக்கமாக இதுபோன்ற சூழல்களில் நடிகைகளை கடுப்பேற்றும் படியான கேள்விகளை சிலர் கேட்பதுண்டு. அந்த வகையில் நெட்டிசன் ஒருவன், உங்களது உள்ளாடை சைஸ் என்ன என கேள்வி எழுப்பினார்.

44

இதற்கு பதிலளித்த பிரியா, “மார்பகங்களை நான் வேற்று கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களுக்கு அது உள்ளது” எனக்கூறி தரமான பதிலடி கொடுத்துள்ளார். நடிகை பிரியா பவானி சங்கரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இதையும் படியுங்கள்... Beast Box Office : வலிமை படத்தின் முதல் நாள் வசூலை அடிச்சுதூக்கி டாப் டக்கர் சாதனை படைத்த பீஸ்ட்

Read more Photos on
click me!

Recommended Stories