ரஜினி படத்தை இயக்க ‘பார்க்கிங்’ இயக்குநருக்கு கமல் வழங்கிய லைஃப்டைம் செட்டில்மெண்ட்! அடேங்கப்பா இத்தனை கோடியா?

Published : Nov 26, 2025, 03:23 PM IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 173 திரைப்படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ள நிலையில், அப்படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் பற்றி பார்க்கலாம்.

PREV
14
Ramkumar Balakrishnan Salary For Thalaivar 173 Movie

ரஜினிகாந்த் படத்தை இயக்க சான்ஸ் கிடைக்காதா என பல இயக்குநர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், கிடைத்த சான்ஸை நழுவவிட்டிருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த தலைவர் 173 திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. இதற்கான அறிவிப்பும் நவம்பர் முதல் வாரத்தில் வெளியானது. ஆனால் அறிவிப்பு வெளியான மறு வாரமே அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டார் சுந்தர் சி. அவரின் திடீர் விலகலுக்கான காரணமும் வெளியிடப்படாமல் இருந்தது.

24
தலைவர் 173 அப்டேட்

பின்னர் இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், ரஜினிகாந்துக்கு சுந்தர் சி சொன்ன கதை திருப்தி அளிக்கவில்லை என சூசகமாக கூறி இருந்தார். அதுமட்டுமின்றி அவருக்கு பிடிக்கும் வரை கதை கேட்போம் என்றும் கமல்ஹாசன் கூறி இருந்தார். இதையடுத்து ரஜினி படத்தை இயக்க தனுஷ், ஆர்.ஜே.பாலாஜி, நிதிலன் சுவாமிநாதன் ஆகியோர் ரஜினியிடம் கதை சொன்னதாகவும் பேச்சு அடிபட்டது. இவர்களில் யார் ரஜினி படவாய்ப்பை தட்டிதூக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

34
ரஜினியை இயக்கும் பார்க்கிங் பட இயக்குநர்

ஆனால் இந்த ரேஸில் கடைசி ஆளாக நுழைந்து ரஜினியின் தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தட்டிதூக்கி இருக்கிறார். அவர் இயக்கிய முதல் படமான பார்க்கிங் தேசிய விருதை வென்றிருந்தது. இதையடுத்து சிம்புவின் எஸ்.டி.ஆர் 49 திரைப்படத்தை இயக்க கமிட்டாகி இருந்தார் ராம்குமார். ஆனால் அப்படம் பூஜையோடு கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து ரஜினியை சந்தித்து ராம்குமார் சொன்ன கதை அவருக்கு பிடித்துப் போனதால், ரஜினியும் ஓகே சொல்லிவிட்டாராம்.

44
ராம்குமார் பாலகிருஷ்ணனின் சம்பளம்

பார்கிங் படத்தை இயக்க வெறும் 6 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கி இருந்த ராம்குமார் பாலகிருஷ்ணன், அடுத்ததாக சிம்பு படத்தை இயக்க ரூ.2 கோடி சம்பளம் பெற இருந்தாராம். அப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், தற்போது ரஜினி பட வாய்ப்பை தட்டி தூக்கிய ராம்குமாருக்கு அப்படத்தை இயக்க ரூ.10 கோடி சம்பளம் வழங்க இருக்கிறாராம் அப்படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன். இதன்மூலம் இரண்டாம் படத்திலேயே 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய இயக்குநர் என்கிற சாதனையை படைத்திருக்கிறார் ராம்குமார்.

Read more Photos on
click me!

Recommended Stories