என்னது பாரதி கண்ணம்மா பார்ட் 3-யா? விஜய் டிவியின் புது சீரியல் அறிவிப்பால் ஷாக் ஆன ரசிகர்கள்

Published : Nov 26, 2025, 02:31 PM IST

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த கையோடு, புத்தம் புது சீரியல் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது. அது என்ன சீரியல், அதில் யார் நடிக்க உள்ளார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Suttum Vizhi Sudare Serial

சன் டிவிக்கு அடுத்தபடியாக சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த சேனல் என்றால் அது விஜய் டிவி தான். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு நகரத்து மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் கிராமப்புரங்களில் சன் டிவி கிங் ஆக இருப்பது போல், நகரங்களில் விஜய் டிவி சீரியல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. விஜய் டிவியில் சக்கைப்போடு போட்ட சீரியல்கள் சில இருக்கின்றன. அதில் பாரதி கண்ணம்மா சீரியலும் ஒன்று. இந்த சீரியலின் முதல் சீசன், 2019-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை சுமார் நான்கு ஆண்டுகள் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

24
பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியல் எந்த அளவுக்கு ஹிட் ஆனதோ அந்த அளவுக்கு ட்ரோல் மெட்டீரியலாகவும் மாறியது. அந்த சீரியலில் கண்ணம்மா, வீட்டைவிட்டு வெளியேறி பையுடன் சென்றதை கடுமையாக ட்ரோல் செய்தனர். ட்ரோல்கள் அதிகமானதால் அந்த சீரியல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அதே பெயரில் புது கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா 2 சீரியலும் 2023-ம் ஆண்டே தொடங்கப்பட்டது. இந்த சீரியலில் சிபு சூர்யன் மற்றும் வினுஷா ஆகியோர் நடித்தனர். முதல் சீசன் அளவுக்கு வரவேற்பு இல்லாததால் தொடங்கிய 6 மாதங்களிலேயே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

34
புது சீரியல்

இந்த நிலையில், விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலின் மூன்றாவது சீசன் வர உள்ளதாக தகவல் பரவி வருகிறது. நேற்று விஜய் டிவி ஒரு புத்தம் புது சீரியலின் புரோமோவை வெளியிட்டது. சுட்டும் விழி சுடரே என பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியலில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வினுஷா, சிறையில் கண்ணீர்மல்க அமர்ந்திருக்கிறார். கருவில் இருக்கும் குழந்தை, சிறையில் இருக்கும் தாயின் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வருமா என்கிற குறுஞ்செய்தி உடன் வெளிவந்துள்ள இந்த புரோமோவை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன பாரதி கண்ணம்மா பார்ட் 3-ஆ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

44
டைம் ஸ்லாட் என்ன?

சுட்டும் விழி சுடரே சீரியல், தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான சின்னு என்கிற சீரியலின் தமிழ் ரீமேக் தான் இந்த சீரியலாம். இந்த சீரியலில் வினுஷா உடன் யார்... யார் நடிக்கிறார்கள் என்பது வெளியிடப்படவில்லை. இந்த சீரியல் வருகிற 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இரவு பிரைம் டைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories