ரகுவரனின் மரணத்திற்கு பின்னணியில் இப்படி ஒரு சோகமா? சகோதரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Published : Aug 09, 2023, 02:30 PM IST

ரகுவரனின் மரணத்திற்கு பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி தகவலை அவரது சகோதரர் ரமேஷ்வரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

PREV
14
ரகுவரனின் மரணத்திற்கு பின்னணியில் இப்படி ஒரு சோகமா? சகோதரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

90-களில் வில்லன் என்றாலே அனைத்து இயக்குனர்களுக்கு முதலில் மனதில் வந்து நிற்பவர் ரகுவரன். அவரின் குரல் மற்றும் உடல்மொழி ஆகியவை அக்மார்க் வில்லனாக ரகுவரனை அடையாளப்படுத்தியது. இவரைவிட யாரும் சிறந்த வில்லனாக இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு பாட்ஷா, முதல்வன் போன்ற படங்களில் ரகுவரனின் நடிப்பு இருக்கும். இப்படிப்பட்ட மகாநடிகன், 49 வயதிலேயே இயற்கை எய்திவிட்டார். அவர் மரணமடைந்து 15 ஆண்டுகள் ஆனால் இன்றளவும் அவரின் இடத்தை எந்த நடிகராலும் பிடிக்க முடியவில்லை.

24

இந்நிலையில், நடிகர் ரகுவரனின் மறைவு குறித்தும் கடைசி காலகட்டத்தில் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்தும் அவரது சகோதரர் ரமேஷ்வரன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அவர் தெரிவித்துள்ளதாவது : “யாரடி நீ மோகினி தான் அண்ணனின் கடைசி படம். அதில் நடிக்க இயக்குனர் ரகுவரனை அணுகியபோது, கதை கேட்டு, தனுஷின் கேரக்டர் தனது மகன் ரிஷியை நினைவு படுத்தும் வகையில் உள்ளதால் உடனடியாக நடிக்க சம்மதித்துவிட்டார்.

இதையும் படியுங்கள்... பீஸ்ட்டில் சொதப்பினாலும்... ஜெயிலர் படத்திற்காக நெல்சனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - அதுவும் இத்தனை கோடியா?

34

எதிர்பார்த்தபடியே யாரடி நீ மோகினி படமும் மாபெரும் வெற்றி பெற்றது. வழக்கமாக வில்லன் கேரக்டரில் நடிக்கும் ரகுவரன், அதில் பாசமிகு தந்தையாக நடித்திருந்ததால் அவரது கேரக்டரும் மக்கள் மனதில் இடம்பிடித்தது. இப்படத்தின் டப்பிங் முடித்ததுமே மிகவும் மன சோர்வுடன் காணப்பட்டார் ரகுவரன். யாருடனும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். அந்த மன அழுத்தமும் அவரது இறப்பிற்கு முக்கிய காரணம் என அவரது சகோதரர் கூறி இருக்கிறார்.

44

நடிகர் ரகுவரன் யாரடி நீ மோகினி திரைப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே இறந்துவிட்டார். அதிகளவு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் மரணமடைந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது மரணத்திற்கு மன அழுத்தம் தான் காரணம் என அவரது சகோதரர் கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரகுவரன் நடிகை ரோகினியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சாய் ரிஷிவரன் என்கிற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... பிரகாஷ் ராஜ் நின்ற இடத்தை கோமியம் ஊற்றி கழுவிய மாணவர்கள் - பரபரப்பை கிளப்பிய வீடியோ இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories