விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ், ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நெல்சன், தமிழ் திரையுலகில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்த திரைப்படம் கோலமாவு கோகிலா. நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருந்த இப்படத்தை டார்க் காமெடி படமாக உருவாக்கி அனைவரையும் ரசிக்கவும் வைத்தார். அதோடு இப்படத்தில் அனிருத், நெல்சன் காம்போவில் பாடல்களும் வேறலெவல் ஹிட் அடித்தன.
பீஸ்ட் வெளியாகும் முன்பே நெல்சன் கமிட் ஆன திரைப்படம் தான் ஜெயிலர். பீஸ்ட் ரிசல்டை பார்த்துவிட்டு அவரை படத்திலிருந்து நீக்க பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால் சூப்பர்ஸ்டார் சொன்ன வார்த்தையால் நெல்சனுக்கு ஜெயிலர் வாய்ப்பை வழங்கியது சன் பிக்சர்ஸ். சுமார் ஓராண்டு கடினமாக உழைத்து ஜெயிலர் படத்தை எடுத்து முடித்துள்ள நெல்சன், தற்போது அப்படத்தின் ரிசல்டுக்காக ஆவலோடு காத்திருக்கிறார். இப்படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.