அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டே நொந்துவிடுவார்கள் போல. அப்படி ஒரு நிலை தான் அவர்களுக்கு இருந்து வருகிறது. வலிமை அப்டேட்டை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி யாருமே மறந்திருக்க முடியாது. அப்படத்திற்கான அப்டேட்டை வெளியிடாததால், உள்ளூர் தேர்தல் பிரச்சாரம் முதல், சர்வதேச கிரிக்கெட் போட்டி வரை செல்லும் இடமெல்லாம் அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் செய்த அலப்பறையை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், நேற்று மூன்றாவது டி20 போட்டி கயானாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியை காண மைதானத்திற்கு வந்திருந்த அஜித் ரசிகர் ஒருவர், ஏகே 62 படமான விடாமுயற்சி அப்டேட் வேண்டும் என கேட்டு பதாகைகளை கொண்டி வந்திருந்தது டிவியில் ஒளிபரப்பானது. அந்த ரசிகர் கையில் பதாகையுடன் இருக்கும் ஸ்கிரீன் ஷாட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றனர். இதன்மூலம் அஜித் ரசிகர்கள் மீண்டும் அப்டேட் அலப்பறையை தொடங்கி உள்ளது தெரிகிறது. இன்னும் என்னென்னவெல்லாம் செய்யப்போகிறார்களோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... வேதாளம் கிரிஞ் படம்னா... எதுக்கு ரீமேக் பண்ணுன? போலா ஷங்கர் இயக்குனரை ரவுண்டு கட்டி வெளுத்துவாங்கிய அஜித் fans