நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் நடித்திருக்கிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். ஜெயிலர் படத்தின் ரிலீஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்று இருக்கிறார்.
rajinikanth
இன்று காலை இமயமலைக்கு கிளம்பும் முன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லவில்லை தற்போது செல்கிறேன் என கூறிய அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். அதன்படி, ஜெயிலர் படம் எப்படி இருக்கு என கேட்டனர். இதற்கு பதிலளித்த ரஜினி, அதை நீங்க தான் சொல்லனும், படம் பார்த்துட்டு சொல்லுங்க என தன் சிக்னேச்சர் ஸ்மைல் உடன் கூறினார்.
பின்னர் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பியதும் அதற்கு பதிலளிக்காமலேயே காரில் கிளம்பிவிட்டார் ரஜினி. பின்னர் விமான நிலையம் வந்த ரஜினிகாந்தை போட்டோ எடுக்க ரசிகர்கள் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை பத்திரமாக விமான நிலையத்திற்குள் அழைத்து சென்றனர்.
இதையும் படியுங்கள்... கேரளாவில் ஜெயிலர் ரிலீஸ் தேதி அதிரடியாக மாற்றம்... எல்லாத்துக்கும் காரணம் ரஜினி தானாம்!