ரஜினி நடிப்பில் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கியுள்ள இத்திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு உலகளவில் எதிர்பார்ப்பு எகிறிய வண்ணம் உள்ளது. ஜெயிலர் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் இப்படத்திற்கு அதிகளவில் மவுசு உள்ளது.
குறிப்பாக கேரளாவில் இப்படம் நேரடி மலையாள படங்களுக்கு நிகராக ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு காரணம் ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதனால் அங்கு ஜெயிலருக்கு அதிகளவிலான தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. கேரளாவில் மட்டும் இப்படம் சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான முன்பதிவும் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... மெகா வெற்றிக்கு தயாராகும் தலைவர்..! 'ஜெயிலர்' படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் மட்டும் இத்தனை கோடியா?
ஜெயிலர் படத்துக்கு போட்டியாக மலையாளத்தில் உருவாகி இருக்கும் சிறு பட்ஜெட் படமொன்றும் ரிலீஸ் ஆக இருந்தது. அதில் சிக்கல் என்னவென்றால், அந்த படத்தின் பெயரும் ஜெயிலர் தான். இதன் காரணமாக கேரளாவில் மட்டும் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தை வேறு பெயருடன் ரிலீஸ் செய்யுமாறு மலையாள ஜெயிலர் படக்குழு தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் தமிழ் ஜெயிலர் டீம் அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
இந்த படத்தை நம்பி தான் தன் எதிர்காலமே இருப்பதாக மலையாள ஜெயிலர் படத்தின் இயக்குனர் சக்கீர் மடத்தில் கண்ணீர்மல்க பேட்டி அளித்து இருந்தார். அதுமட்டுமின்றி தனது படத்துக்கு 40 தியேட்டர்கள் மட்டும் ஒதுக்கிவிட்டு, ரஜினி படத்துக்கு 400 தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை கண்டித்து தர்ணா போராட்டமும் நடத்தினார். அவரின் குரலுக்கு அம்மாநில திரைத்துறையும் செவி சாய்க்காததால் தற்போது வேறுவழியின்றி மலையாள ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர். அதன்படி ஆகஸ்ட் 10-ந் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 18-ந் தேதி மலையாள ஜெயிலர் திரைப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... கேஜிஎப் 2 சாதனை முறியடிப்பு... ராக்கி பாய் கோட்டையில் அலப்பறை கிளப்பும் ரஜினியின் ஜெயிலர்