நடிகர் விஷால் பல வருடங்களாக பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, சில நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். ஆனால் சரத்குமாருக்கு வரலட்சுமி விஷாலை காதலித்து வந்தது, பிடிக்கவில்லை என கூறப்பாடலும் வரலட்சுமி தன்னுடைய காதலில் மிகவும் உறுதியாக இருந்தார்.
அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு, விஷாலுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா ரெட்டி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் அவ்வப்போது சில ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு காதல் மழையை பொழிந்து வந்த நிலையில்... திடீர் என அனிஷா ரெட்டி விஷாலுடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கினார்.
எனவே இவர்களின் திருமணம் நின்று விட்டதாக சில தகவல்கள் பரவிய நிலையில், பின்னர் திருமணம் நின்றது உறுதியானது. இதை தொடர்ந்து, விஷால் மீண்டும் பழைய காதலியான, நடிகை ஒருவருடன் தன்னுடைய காதலை புதுப்பித்துள்ளதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரத்துக்கொண்டுள்ளது.
Breaking: விஜய்யின் பிரெண்ட்ஸ் பட இயக்குனர் சித்திக் காலமானார்!
அவர் வேறு யாரும் அல்ல, நடிகை லட்சுமி மேனன் தான். 28 வயதை எட்டி விட்ட இவருக்கு, ஏற்கனவே அவரின் வீட்டிலும் மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறப்பட்டது. சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் திருமண பேச்சு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலில், லட்சுமி மேனனுக்கும் - விஷாலுக்கும் திருமணம் செய்து வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இப்படி வெளியாகும் இந்த தகவல் பற்றி எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், இது வழக்கம் போல் வந்ததியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.