இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பின்னர், நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜுன், யோகி பாபு, கதிர், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் சமீபத்தில் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு நான் ரெடி பாடல் வெளியான நிலையில், இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும்.. பாடல் முழுவதும் தம், சரக்கு, போன்ற வார்த்தைகள் நிரம்பி வழிவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாக புகார் மனுக்களும் அளிக்கப்பட்டது.
அதன்படி முதல் பாகத்தில் இரண்டாவது பாகத்திற்கான லீடுடன் லியோ திரைப்படம் நிறைவடையும் என்றும், லியோ இரண்டாம் பாகத்தை... கைதி இரண்டாம் பாகத்தின் கதையுடன் இணைத்து உருவாக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டாம் பாகம் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. லியோ படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டாலும், ஒரு சில காட்சிகளை எடுக்க லோகேஷ் கனகராஜ் மீண்டும் காஷ்மீருக்கு சென்றுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.