Ramayana Movie Box Office : நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி நடிப்பில் ரிலீஸ் ஆகி வெற்றிநடைபோட்டு வரும் ராமாயணா திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். சீதையாக சாய் பல்லவி நடித்துள்ளார். உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் இப்படம் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. இதுவரை ராமாயணா படம் உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.
இப்படம் ரிலீஸ் ஆன 8 நாட்களில் உலகளவில் ரூ.1033.55 கோடி வசூலை வாரிசுருட்டி உள்ளது. ராமாயணா திரைப்படம் நேற்று மட்டும் இந்தியாவில் 53.50 கோடியும், வெளிநாடுகளில் 25 கோடியும் வசூலித்துள்ளது. இதுவரை இப்படத்தின் இந்தி வெர்ஷன் தான் அதிகபட்சமாக ரூ.437 கோடி வசூல் செய்துள்ளது. அடுத்ததாக கன்னடத்தில் 48.95 கோடியும், தெலுங்கில் 38.05 கோடியும், தமிழில் 22.15 கோடியும், மலையாளத்தில் 18.45 கோடியும் வசூல் செய்துள்ளது.
24
பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆன ராமயாணா
நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், எட்டு முறை ஆஸ்கர் விருது வென்ற முன்னணி விஷுவல் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோவான டிஎன்இஜி மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ராமாயணா திரைப்படம் மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமா இதுவரை கண்டிராத மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த காவியப் படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். இந்தியாவிலும் எல்லைகளைத் தாண்டியும் தலைமுறைகளாக வழிபடப்படும் தர்மத்தின் அடையாளமான ஸ்ரீராமராக ரன்பீர் கபூர் நடித்துள்ளார். சீதா தேவியாக சாய் பல்லவி நடிக்கும் போது, அவர் அந்த கதாபாத்திரத்திற்கு எளிமையையும், வலிமையையும், கருணையையும் தருகிறார்.
34
4000 கோடி பட்ஜெட்
பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனது மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மூலம் இப்படத்தை தயாரிக்கும் பான்-இந்திய சூப்பர் ஸ்டார் 'ராக்கிங் ஸ்டார்' யாஷ், உலக சினிமா இதுவரை கண்டிராத வலிமையான மற்றும் வெல்ல முடியாத வில்லன்களில் ஒருவரான ராவணனாக படத்தில் நடித்துள்ளார்.
தமிழர்களின் விருப்பமான நடிகை ஷோபனா கைகேயியாக நடிப்பது, தமிழ் ரசிகர்களுக்கு இப்படத்தில் மற்றொரு முக்கிய அம்சமாகும். முன்பு தொலைக்காட்சி ராமாயண தொடரில் ஸ்ரீராமராக நடித்து மக்கள் மனதை வென்ற அருண் கோவில், தசரத மகாராஜாவாக மீண்டும் வந்துள்ளார். 'தங்கல்' படத்தின் மூலம் மூலம் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஈர்த்த பிரபல இயக்குனர் நிதேஷ் திவாரி இப்படத்தை இயக்கி உள்ளார். ராமாயணா திரைப்படத்தை 4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளனர்.
லட்சுமணனாக ரவி துபே, விஸ்வாமித்திர மகரிஷியாக அஜிங்க்யா தியோ, இந்திர தேவனாக குனால் கபூர், சூர்ப்பனகையாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற இசை ஜாம்பவான்களான ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் முதல் முறையாக இணைவது இப்படத்தின் மற்றொரு சிறப்பு. இப்படத்திற்கு ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை அமைத்துள்ளார். எட்டு முறை அகாடமி விருது வென்ற பிரபல வி.எஃப்.எக்ஸ் ஸ்டுடியோவான டிஎன்இஜி இப்படத்தின் பிரம்மாண்ட காட்சிகளுக்கு பின்னால் உள்ளது. "ராமாயணம் என்பது ஒரு கதை மட்டுமல்ல, அது நம் வாழ்வின், கலாச்சாரத்தின் ஒரு பகுதி. இந்தியாவின் மிகப்பெரிய காவியத்தை அதன் அனைத்து பௌதீக அழகுடனும், கண்ணியத்துடனும் உலகுக்கு முன்வைப்பதே எங்கள் நோக்கம்" என தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாகம் தான் தற்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது. இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.