விஜய் சேதுபதியின் டபுள் தமாக்கா: மணிரத்னத்தின் ‘இஞ்சி வெல்லம்’, தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு!

Published : Nov 12, 2026, 06:02 PM IST

விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா! மணிரத்னத்தின் ‘இஞ்சி வெல்லம்’ மற்றும் தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ ரிலீஸ் தேதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

PREV
14
ஜன.2027-ல் விஜய் சேதுபதி டபுள் தமாக்கா: அடுத்தடுத்து 2 படங்கள் ரிலீஸ்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் இரட்டை விருந்தாக அமைய உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி-சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ (Inji Vellam) மற்றும் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பாக்கெட் நாவல்’ (Pocket Novel) 2 பிரம்மாண்ட திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

24
விஜய் சேதுபதி - சாய் பல்லவி நடிக்கும் மணிரத்னத்தின் ‘இஞ்சி வெல்லம்’

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள ‘இஞ்சி வெல்லம்’ (Inji Vellam) திரைப்படம், 2027 ஜன.29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு புதன்கிழமை (நவம்பர் 11) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் சார்பில் சுபாஸ்கரன், மணிரத்னம் மற்றும் சிவா ஆனந்த் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர்.

வெளியீட்டுத் தேதியுடன் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டரில், கொல்கத்தா வீதிகளில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி மற்றும் அவர்களது இரட்டைப் பெண் குழந்தைகள் இருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. படத்தின் கதைக்களம் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவிக் முகோபாத்யாய ஒளிப்பதிவையும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் கடைசியாக இயக்கிய ‘தக் லைஃப்’ (2025) திரைப்படம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல் வசூல் ரீதியாகத் தோல்வியடைந்த நிலையில், இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

34
பொங்கல் பண்டிகையை குறிவைக்கும் ‘பாக்கெட் நாவல்’ (Pocket Novel)

மணிரத்னத்தின் ‘இஞ்சி வெல்லம்’ வெளியாவதற்கு 2 வாரங்களுக்கு முன்பாக, ‘ஆரண்ய காண்டம்’ (2010) மற்றும் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாக்கெட் நாவல்’ திரைப்படம் திரைக்கு வர உள்ளது. விஜய் சேதுபதி, ராஜ் பி. ஷெட்டி, கிஷோர் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், 2027 ஜன.14-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபெஸ்ட் (Tyler Durden and Kino Fest) பேனரில் தியாகராஜன் குமாரராஜா மற்றும் எஸ்.டி. எழில்மதி ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இப்படத்தின் புதிய போஸ்டரை தனது X தளத்தில் பகிர்ந்த விஜய் சேதுபதி, இந்த பொங்கலுக்குப் பக்கங்கள் புரட்டப்படுகின்றன எனப் பதிவிட்டுள்ளார். ‘லீலை’, ‘கொலைகாரன்’, ‘வதந்தி’ ஆகிய படைப்புகளை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்திற்குக் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார்.

நிர்வாண் ஷா ஒளிப்பதிவு செய்ய, சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். முதலில் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பதாக இருந்தது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் இப்படத்திலிருந்து விலகியதைத் தொடர்ந்து, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முன்னதாக 2023-ல் வெளியான ‘மாடர்ன் லவ் சென்னை’ ஆந்தாலஜி தொடரில் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ பகுதிக்கு இளையராஜா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் மாதத்துடன் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

44
விஜய் சேதுபதி & சாய் பல்லவியின் அடுத்தடுத்த படங்கள்

சமீபத்தில் வெளியாகிப் பாராட்டுகளைப் பெற்ற ‘பத்தா’ (Baththa) திரைப்படத்தைத் தொடர்ந்து, மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ட்ரெயின்’ (Train) திரைப்படம் டிச.4 அன்று வெளியாகிறது. இது தவிர, பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் ‘ஸ்லம் டாக்’ (Slum Dog), ராஜ் & டிகே இயக்கத்தில் ‘ஃபார்ஸி 2’ (Farzi 2) ஆகிய படைப்புகளையும் கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி, ‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். மறுபுறம், ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் உடன் ‘ராமாயணா: பாகம் 1’ படத்தில் நடித்திருந்த சாய் பல்லவி, அடுத்ததாக தனுஷ், மம்மூட்டி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோருடன் இணைந்து ‘ஓம்: அத்தியாயம் 1’ (OM: Chapter 1) திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories