Suriya : இதுதான்டா கம்பேக்... ரஜினி, விஜய் கூட செய்திராத பாக்ஸ் ஆபிஸ் சாதனையை அசால்டாக அடிச்சுதூக்கிய சூர்யா...!

Published : Nov 12, 2026, 01:23 PM IST

Box Office King Suriya : நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வந்த ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் செய்திராத சாதனையை பாக்ஸ் ஆபிஸில் செய்து புது வரலாறு படைத்துள்ளார்.

PREV
15
சூர்யாவின் சீன் வெற்றி

தமிழ்- மலையாள சினிமா ரசிகர்கள் ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருந்த படம் தான் சீன். ஆவேஷம், ரோமாஞ்சம் மாதிரி சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஜித்து மாதவன், இந்த தமிழ் படத்தை இயக்கியிருக்காருன்றது தான் ரசிகர்கள் மத்தியிலயும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திச்சு. அதோட ஹீரோவா சூர்யா, வில்லனா நஸ்லென், ஹீரோயினா நஸ்ரியா நடிச்சிருக்காங்க. காமெடி- த்ரில்லர் ஜானர்ல உருவான இந்த படம் நவம்பர் 6-ஆம் தேதி தியேட்டர்ல ரிலீஸ் ஆச்சு. முதல் ஷோவிலிருந்தே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுட்டு வர்ற சீன் படத்தோட, இதுவரைக்குமான குளோபல் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்டை படக்குழு வெளியிட்டுருக்காங்க.

25
சீன் வசூல் எவ்வளவு?

சீன் படம் இதுவரைக்கும் 205 கோடி ரூபாய்க்கும் மேல கலெக்ஷன் பண்ணியிருக்கு. ரிலீசாகி அஞ்சு நாள்ல உலகளவுல நடந்த வசூல் இது. சீன் படத்தை தயாரிச்ச ழகரம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க. ரிலீசாகி ரெண்டாவது வாரத்தை எட்டப்போற நிலைமையில, சீன் படத்துக்கு ஆடியன்ஸ் கிட்டருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுட்டு வருது. சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் இவங்களோட சிறப்பான நடிப்பு தான் படத்தோட பெரிய பிளஸ்னு ரசிகர்கள் சொல்றாங்க. இதன்மூலம் ஒரே ஆண்டில் மூன்று 200 கோடி வசூல் படங்களை கொடுத்த தமிழ் ஹீரோ என்கிற சாதனையை படைச்சிருக்காரு சூர்யா.

35
தொடர்ச்சியாக மூன்று 200 கோடி வசூல் படங்கள்

இதற்கு முன்னதாக சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் கருப்பு ஆகிய படங்கள் ரிலீஸ் ஆச்சு. இதுல, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்த வெங்கி அட்லூரி என்கிற தெலுங்கு இயக்குநர் இயக்கி இருந்தாரு. சித்தாரா நிறுவனம் தயாரிச்ச அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 212 கோடி வசூல் செய்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருந்தார். மேலும் ராதிகா சரத்குமார், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

45
தரமான கம்பேக் கொடுத்த சூர்யா

இதேபோல் இந்த ஆண்டு சூர்யா கொடுத்த மற்றுமொரு மாஸ் ஹிட் படம் என்றால் அது கருப்பு தான். அப்படத்தை ஆர்ஜே பாலாஜி தயாரித்திருந்தார். அப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் இந்திரன்ஸ், தீபா, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த கருப்பு திரைப்படம் இந்த ஆண்டு மே மாதம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் 340 கோடி வரை வசூலை வாரிசுருட்டியது. சூர்யாவின் கெரியரில் அதிக வசூல் அள்ளிய படமும் இதுதான். இந்த படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார் சூர்யா. இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைச்சிருந்தாரு.

55
கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்

நடிகர் சூர்யாவுக்கு கடைசியாக பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைஞ்ச படம் என்றால் சிங்கம் 2 தான். அப்படம் ரிலீஸ் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. இந்த 13 ஆண்டுகளில் அவருக்கு தியேட்டரில் மிகப்பெரிய வெற்றி ஒன்றுகூட கிடைக்கவில்லை. இதனால் துவண்டு கிடந்த சூர்யாவின் கெரியரை தூக்கி நிறுத்தி இருக்கிறது 2026-ம் ஆண்டு. ஒரே ஆண்டில் 3 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை மீட்டெடுத்துள்ளார் சூர்யா. ரஜினிக்கு அடுத்தபடியாக பாக்ஸ் ஆபிஸில் கிங் ஆக வலம் வருகிறார் சூர்யா. அவரின் வெற்றி அடுத்த ஆண்டும் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories