கேம் சேஞ்சர் முதல் நாள் வசூல் இவ்வளவா? ஐஏஎஸ் அதிகாரி, எலக்‌ஷன் ஆபிசராக வசூல் வேட்டையாடிய ராம் சரண்!

Published : Jan 11, 2025, 09:35 AM ISTUpdated : Jan 11, 2025, 10:16 AM IST

Game Changer Box Office Collection Day 1 Report : ராம் சரண், கியாரா அத்வானி ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்த கேம் சேஞ்சர் முதல் நாளில் எத்தனை கோடி வசூல் குவித்திருக்கிறது என்று பார்க்கலாம்.

PREV
15
கேம் சேஞ்சர் முதல் நாள் வசூல் இவ்வளவா? ஐஏஎஸ் அதிகாரி, எலக்‌ஷன் ஆபிசராக வசூல் வேட்டையாடிய ராம் சரண்!
Game Changer Box Office Collection Day 1 Report

Game Changer Box Office Collection Day 1 Report : இந்தியன் 2 படத்தின் தோல்விக்கு பிறகு அதிக விமர்சனங்களை எதிர்கொண்டவர் இயக்குநர் ஷங்கர். இந்தப் படத்திற்கு பிறகு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இயக்குநர் ஷங்கருக்கு இப்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் படம் தான் கேம் சேஞ்சர். இந்தப் படத்திற்காக தனது 3 வருட உழைப்பை கொடுத்திருப்பவர் நடிகர் ராம் சரண். மேலும் அஞ்சலி, கியாரா அத்வானி, எஸ் ஜே சூர்யா, ஜெயராம், ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். தில் ராஜூ தயாரித்த இந்தப் படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ளார். ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

25
Samuthirakani, Anjali, Kiara Advani, Game Changer Collection

இயக்குநர் ஷங்கரின் அரசியல் கதையில் இந்தப் படமும் ஒன்று என்பதால் ரசிகர்களிடையே போதுமான அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. அதிலேயும் குறிப்பாக தமிழ் ரசிகர்களை இந்தப் படம் பெரியளவில் கவரவில்லை. இது போன்று ஐஏஎஸ் மற்றும் ஊழல் அரசியல்வாதிகளுக்கு இடையிலான கதையை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளியாகியிருக்கிறது. அதே போன்று தான் எலெக்‌ஷன் ஆபிசர் மற்றும் ஊழல் அதிகாரிக்கு எதிரான கதையும் தமிழ் சினிமாவில் வந்திருக்கின்றன.

35
Ram Charan, S J Suryaj, Jayaram

அப்படி ஒரு கதையை கொண்ட கேம் சேஞ்சர் படத்தில் தான் இப்போது ராம் சரண் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருந்தார். ஆனால், அவரது கதாபாத்திரம் பெரியளவில் ஒர்க் அவுட்டாகவில்லை. இதே போன்று நடிகை அஞ்சலியும், முதல் பார்ட்டில் இல்லையென்றாலும் 2ஆவது பார்ட்டில் ஒரு சில சீன்களில் வந்து சென்றுள்ளார்.

45
Game Changer Box Office Collection

மேலும், சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் 2ஆவது சீனில் தான் எடுபட்டிருக்கிறது. இந்தப் படம் முழுக்க முழுக்க எஸ் ஜே சூர்யா மற்றும் ராம் சரண் இடையில் மட்டுமே நடக்கும் கதை. மற்ற கதாபாத்திரங்கள் ஏன் இருக்கிறது என்று தெரியாமலே இந்தப் படத்தில் வைத்திருக்கிறார் ஷங்கர். இருந்தாலும் கூட தமிழ் ரசிகர்களை தவிர மற்ற மொழி ரசிகர்களை கேம் சேஞ்சர் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அந்த வகையில் கேம் சேஞ்சர் முதல் நாளில் மட்டும் ரூ.51 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. இதில், 7 கோடி ஹிந்தி மொழியிலிருந்து வசூல் குவித்தது.

55
Game Changer Box Office Collection Day 1 Report

தெலுங்கு சினிமாவில் கேம் சேஞ்சர் ரூ.41 கோடியும், தமிழில் ரூ.2.1 கோடியும் வசூல் குவித்திருக்கிறது. இது தவிர கன்னடாவில் ரூ.1 லட்சம் மற்றும் மலையாளத்தில் ரூ.50 லட்சம் என்று வசூல் குவித்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக உலகம் முழுவதும் ரூ.186 கோடி வரையில் வசூல் குவித்திருக்கிறது. இவ்வளவு வசூல் குவிக்க காரணம், அஜித் நடிப்பில் வெளியாக இருந்த விடாமுயற்சி பொங்கல் ரேஸிலிருந்து பின் வாங்கியது தான். இந்தப் படம் மட்டும் நேற்று திரைக்கு வந்திருந்தால் கேம் சேஞ்சர் தமிழில் இந்தளவிற்கு கூட வசூல் குவித்திருக்கிறது. கேம் சேஞ்சர் தமிழக வசுல் குறைவதற்கு மற்றொரு காரணம் அருண் விஜய்யின் வணங்கான். இந்தப் படமும் நேற்று திரைக்கு வந்தது. ஆதலால், கேம் சேஞ்சர் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories