கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அதில் கான் துரானி, என்பவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு, தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக நடிகை ராக்கி சாவத் கூறியது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இவரை பற்றி இரண்டாவது கணவர் அதில் கான் கூறியுள்ள தகவல் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
ராக்கி தன்னிடம் பொய் சொன்னதாகவும், ராக்கி சாவத் முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக என்னிடம் கூறிவிட்டு தொடர்ந்து ராக்கியும் ரித்தீஷும் தொடர்பில் இருந்தார்கள். நான் அவரை தாக்கியதாக ராக்கி கூறுகிறார். ஆனால் அவர் தான் என்னை பல முறை தாக்கியுள்ளார். எனக்கு போதை மருந்து கொடுத்து நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வருகிறார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.