
பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இப்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் "வேட்டையன்". வருகின்ற அக்டோபர் மாதம் 10ம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்தில் இருந்து பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக மாறி இருக்கிறது வேட்டையன் என்றால் அது நிச்சயம் மிகையல்ல.
முதல் முறையாக பிரபல இயக்குனர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். ஞானவேல் ஏற்கனவே சூர்யாவின் "ஜெய் பீம்" திரைப்படத்தை இயக்கி மாபெரும் வரவேற்பை தமிழ் ரசிகர்களிடமிருந்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வேட்டையன் திரைப்படத்தின் மூலமாக பாலிவுட் உலகின் "ஷாயின்ஷா" என்று அழைக்கப்படும் அமிதாப்பச்சன் தமிழ்த் திரையுலகில் அறிமுகம் செய்திருக்கிறார் ஞானவேல். மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் பாஹத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடிகைகளும் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும்போது.. 1 மணிநேரம் தேம்பி தேம்பி அழுத ஸ்வர்ணலதா! ஸ்தம்பித்த ஸ்டூடியோ!
இதுஒருபுரம் இருக்க, கடந்த 2023ம் ஆண்டு பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தனது "ஜெயிலர்" திரைப்படத்தை நடித்து முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வெகு நாட்கள் கழித்து தனது இமயமலை பயணத்தை மேற்கொண்டார். அதன்பிறகு அமீரகம் சென்ற அவர், அங்குள்ள லூலூ மால் நிறுவனத்தின் தலைவரோடு இணைந்து அமீரகத்தை சுற்றிப் பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் பெரிய அளவில் வைரலானது.
இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அந்நாட்டு அரசு வழங்கும் உயரிய மரியாதைகளில் ஒன்றான "கோல்டன் விசாவும்" வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரை தொடர்ச்சியாக சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த ஆண்டு இறுதியில் தான் வேட்டையன் திரைப்பட பணிகளை தொடங்கினார். திருநெல்வேலியில் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்தபோது தான் அவரது நண்பரும், அரசியல் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் காலமானார். அவருடைய இறப்பு செய்தியை கேட்ட ரஜினிகாந்த், உடனடியாக ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.
இப்போது தனது வேட்டையன் திரைப்பட பணிகளையும் முழுமையாக முடித்துவிட்டு அதன் ரிலீஸுக்காக காத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" என்கின்ற திரைப்படத்தில் (கடந்த 2 ஆண்டுகளில் அவர் நடிக்கும் 3வது படமிது) நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மூலமாக முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஒரு தமிழ் திரைப்படத்தில் பிரபல நடிகர் நாகார்ஜுனா இணைந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பிரபல மலையாள திரையுலக நடிகர் சௌபின், கன்னட திரை உலகை நடிகர் உபேந்திரா, மூத்த தமிழ் திரையுலக நடிகர் சத்யராஜ், நடிகை சுருதிஹாசன் உள்ளிட்ட பலரும் கூலி திரைப்படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் அப்பிடத்திலிருந்து ஒரு காட்சி வெளியாகி படக்குழுவினருக்கு மிகப்பெரிய மன வேதனையை ஏற்படுத்தியதும் அனைவரும் அறிந்ததே. பலமாத உழைப்பை இப்படி ஒருசில நொடிகளில் அழிப்பது மிகவும் வேதனை தரும் விஷயம் என்றும் வருத்தப்பட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இப்படிப்பட்ட சூழலில் வேட்டையன் திரைப்படத்தின் டிரைலர் வெளியான பிறகு அந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக தற்பொழுது நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து செய்திகள் கிடைத்துள்ளது. அதன்படி வேட்டையன் திரைப்படம் வெளியாகும் அனைத்து மொழிகளிலும், நடிகர் அமிதாப்பச்சனின் சொந்த குரலே AI தொழில்நுட்பம் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அண்மையில் வெளியான வேட்டையன் திரைப்பட டிரைலரில், அமிதாப்பச்சனுக்கு பிரகாஷ்ராஜ் டப்பிங் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அது குறித்த சில நெகட்டிவ் கமெண்டுகள் எழுந்த நிலையில், தற்போது அவருடைய குரல் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக அமிதாப்பச்சனின் குரலை AI தொழில்நுட்பம் மூலம் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில் பிரசாத விவகாரம்.. இயக்குனர் மோகன் ஜி அதிரடி கைது - கொந்தளித்த ராமதாஸ்!