சூப்பர் ஸ்டார் ஸ்கிரிப்ட் எழுத..கே.எஸ்.ரவிக்குமார் குழுவுடன்..மல்டி ஸ்டார் படமாக உருவாகும் தலைவர் 169!

Kanmani P   | Asianet News
Published : Jun 07, 2022, 05:35 PM IST

'முத்து' மற்றும் 'படையப்பா' கூட்டணியில் 'தலைவர் 169' படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராகி வருவதால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர்.

PREV
14
சூப்பர் ஸ்டார் ஸ்கிரிப்ட் எழுத..கே.எஸ்.ரவிக்குமார் குழுவுடன்..மல்டி ஸ்டார் படமாக உருவாகும் தலைவர் 169!
thalaivar 169

அண்ணாத்தே படத்தைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169வது படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார். 'தலைவர் 169' என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தை 'பீஸ்ட்' இயக்குனர் நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்க இருப்பதாக தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர். இப்போது, ​​​​படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய சில சுவாரஸ்ய அப்டேட் வெளியாகியுள்ளது.

24
thalaivar 169

'தலைவர் 169' படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாகவும், சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் தோன்றவிருப்பதாக கூறப்படுகிறது..இந்த படடப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

34
thalaivar 169

இதற்கிடையில், தலைவரின் விண்டேஜ் பிளாக்பஸ்டர் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் நெல்சனுடன் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைக்காக ஒத்துழைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது..  'தலைவர் 169' படத்தின் திரைக்கதையை சூப்பர் ஸ்டாரே எழுதிய ஸ்கிரிப்டுடன் உருவாக்கவுள்ளதாக நாங்கள் தெரிவித்தோவும். இது விரைவில் உறுதியாகும் என ரசிகர்கள் காத்திருகின்றனர். 

44
thalaivar 169

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏற்கனவே 'வள்ளி' மற்றும் 'பாபா' ஆகிய இரண்டு படங்களில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  அதோடு சூப்பர் ஸ்டார் ஹிட் வரிசையில் உள்ள  'முத்து' மற்றும் 'படையப்பா' கூட்டணியில் 'தலைவர் 169' படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாராகி வருவதால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். 

Read more Photos on
click me!

Recommended Stories