லோகேஷ் கனகராஜ்-க்கு Lexus காரை பரிசாக வழங்கிய கமல்ஹாசன்!

Kanmani P   | Asianet News
Published : Jun 07, 2022, 05:10 PM IST

மேலும் விக்ரம் 3 யை உறுதி படுத்திய கமல், இன்று கமல் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு லெக்ஸஸ் காரை பரிசாக அளித்துள்ளார்.

PREV
13
லோகேஷ் கனகராஜ்-க்கு Lexus காரை பரிசாக வழங்கிய கமல்ஹாசன்!
vikram

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கொலோஞ்சி வரும் கமல்ஹாசனின் சமீபத்திய படமான விக்ரம் மிக சிறந்த படமாக மாறிவிட்டது. அதோடு கமலின் பிரியமான இயக்குனராக மாறிவிட்டார் லோகேஷ் கனகராஜ்.  'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, கமல் முதலில் அவரை ஒரு மகனைப் போல நினைத்து ஒரு கடிதம் எழுதினார். கமல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது : “அன்பு லோகேஷ், பெயருக்கு முன் “திரு” போடாமல் விட்டது விபத்தல்ல. திரு.கனகராஜ் அவர்களுக்கு உங்கள் பால் உள்ள உரிமையை உங்களைக் கேட்காமலேயே நான் எடுத்துக் கொண்டுவிட்டேன். இது நமக்குள்ளான தனிப்பட்ட கடிதம் என்பதால். மற்றபடி உங்கள் சாதனைகளுக்கான, பதவிக்கான மரியாதை பழையபடியே தொடரும், அயராது... விழித்திருங்கள், தனித்திருங்கள், பசித்திருங்கள். உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும். உங்கள் நான்” என அந்த கடிதத்தில் கமல்ஹாசன் எழுதியுள்ளார்.

23
vikram movie

மேலும் விக்ரம் 3 யை உறுதி படுத்திய கமல், இன்று கமல் லோகேஷ் கனகராஜுக்கு சொகுசு லெக்ஸஸ் காரை பரிசாக அளித்துள்ளார். மேலும் அவர் சாவியை ஒப்படைக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. லெக்ஸஸ் கார்கள் அறுபது லட்சம் ரூபாய் எக்ஸ்ஷோரூம் விலையில் தொடங்கி, இந்தியாவில் 2.5 கோடிகள் வரை செல்கின்றன, மேலும் இது மிகவும் விரும்பப்படும் வாகனங்களில் ஒன்றாகும்.

33
vikram

'விக்ரம்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் மற்றும் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பரபரப்பான திரைப்படத் தயாரிப்பாளர் விஜய்யின் 'தளபதி 67' படத்தை முடித்த பிறகு, அவர் மீண்டும் கமலுடன் 'விக்ரம் 3' இல் கைகோர்க்கிறார், இதில் சூர்யா, கார்த்தி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோரும் நடிக்கவுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories