ட்ரீட்டா ?..100 கோடியும் எனக்கில்லப்பா.. நண்பர்களிடமிருந்து எஸ்கேப் ஆன எஸ்.கே.

Kanmani P   | Asianet News
Published : Jun 07, 2022, 02:09 PM IST

100 கோடி வசூல்னு பல பேர் ட்ரீட் கேக்குறாங்க. 100 கோடியும் எனக்கே வர்ல" என கலகலப்பாக பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.

PREV
14
ட்ரீட்டா ?..100 கோடியும் எனக்கில்லப்பா.. நண்பர்களிடமிருந்து எஸ்கேப் ஆன எஸ்.கே.
don movie

நெல்சன் இயக்கத்தில் உருவான டாக்டர் படத்தை தொடர்ந்து அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் இவர்களுடன் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே  நடித்திருந்தது.

24
don movie

ரசிகர்களுடன் திரை பிரபலங்களும் டான் படம் குறித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் படக்குழுவை அழைத்து பாராட்டி இருந்த நடிகர் ரஜினிகாந்த், படத்தின் கடைசி 30 நிமிடங்கள் பார்க்கும் போது எமோஷனல் ஆகி கண்ணீர் சிந்தியதாகவும் கூறி இருந்தார். 

34
don movie

கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் இப்படம் கடந்த மே 13-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம்  மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இதையடுத்து படத்தின் 25 ஆவது நாள் வெற்றி விழா நேற்று சென்னையில் நடந்தது.

44
don movie

விழாவில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன் , "டான் படத்தை முதலில் தயாரிக்க லைகா நிறுவனத்தினர் தயங்கினார்கள். பெரிய இயக்குனர் யாரிடமாவது செல்லலாம் என்றார்கள். ஆனால் எனக்கு டான் படத்தின் எனர்ஜி பிடித்தது. பண்ணலாம் என்றதும் என்னையே இணைந்து தயாரிக்க சொன்னார்கள். புது இயக்குனர் என்பதால் குறைவான பட்ஜெட்டே கொடுத்தார்கள். 100 கோடி வசூல்னு பல பேர் ட்ரீட் கேக்குறாங்க. 100 கோடியும் எனக்கே வர்ல" என கலகலப்பாக பேசியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories