சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் குறித்த எந்த தகவல் வெளியானாலும், அந்த நாள் அவரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாள் தான். அதிலும் அவரின் படம் வெளியாகிறது என்றால்... அன்றைய தினம், திரையரங்கம் முன்பு திருவிழாவே கொண்டாடி விடுவார்கள். அப்படி பட்ட பிரமாண்ட வரவேற்புடன் தான், தலைவரின் 169-வது திரைப்படமாக, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர்' படம் உலகம் முழுவதும் வெளியானது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு, தலைவரின் ரசிகர்கள் மட்டும் இன்றி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு சிலர் 'ஜெயிலர்' படத்திற்கு பாதகமாக கமெண்ட் கூறி இருந்தாலும், ஜெயிலர் படம் திரையரங்கில் வெளியான சில மணி நேரங்களிலேயே... திருட்டு தனமாக ஆன்லைனில் வெளியாகி இருந்தாலும், எள்ளளவும் 'ஜெயிலர்' படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சல்வார் அழகில் கச்சிதமாக அழகை வெளிப்படுத்திய அனிகா சுரேந்தரன்! சுத்தி போட சொல்லும் நெட்டிசன்கள்!
தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் ஜெயிலர் படக்குழு மிகுந்த உச்சாகத்தில் உள்ளது. முதல் நாளே கிட்ட தட்ட 100 கோடி வசூலை எட்டிய ஜெயிலர் திரைப்படம், 7 நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் 'ஜெயிலர்' படம் இந்த மாபெரும் வசூல் மூலம் இமாலய சாதனை படைத்து 3 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்க்கு முன்னர், 7 நாட்களில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்பட வரிசையில் 526.86 கோடி வசூல் செய்து, ரஜினிகாந்தின் 2.ஓ திரைப்படம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 450 கோடிக்கு மேல் வசூல் செய்து பொன்னியின் செல்வன் இரண்டாவது இடத்திலும், தற்போது 450 கோடி வசூல் செய்து மூன்றாவது இடத்தில் ஜெயிலர் திரைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.