சல்வார் அழகில் கச்சிதமாக அழகை வெளிப்படுத்திய அனிகா சுரேந்தரன்! சுத்தி போட சொல்லும் நெட்டிசன்கள்!

First Published | Aug 16, 2023, 11:05 PM IST

நடிகை அனிகா சுரேந்திரன், தற்போது கண்ணை பறிக்கும் அழகில்... துளியும் கிளாமர் காட்டாமல், வெள்ளை நிற சல்வாரில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
 

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் பிரபலங்கள்,வளர்ந்த பின்னர் ஹீரோயினாக அறிமுகமாவது சகஜமான விஷயம் தான். அப்படி ஹீரோயினாக அறிமுகமாகும் அனைத்து நடிகைகளுமே, ஜெயித்து விடுவது இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. காரணம், சிலரை குழந்தை நட்சத்திரமாக பார்த்து பழகிய ரசிகர்கள் அவர்களை ஹீரோயின்களாக ஏற்று கொள்ளும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். 

அப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் ஹீரோயினாக மாறிய, கல்யாணி, நிவேதா தாமஸ், சுருதி, ஷீலா, ஷாமிலி  போன்ற பலர் வந்த வேகத்தில் வேகத்தில் திரையுலகில் இருந்து காணாமல் போனார்கள் தான். அதே போல் ஸ்ரீ தேவி, ஸ்ருதி ஹாசன் போன்ற சிலர் மட்டுமே ஹீரோயின்களாக ஜெயித்துள்ளனர்.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மகனாக முதலில் நடிக்க இருந்தது இவரா? சூப்பர் வாய்ப்பை மிஸ் செய்த பிரபலம்!

Tap to resize

ஆனால் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான , கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன், ஸ்ரீ திவ்யா போன்ற நடிகைகள் தமிழில் வெற்றி கொடி நாடியுள்ளனர். அந்த வகையில், தமிழ், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இப்போது ஹீரோயினாக மாறியுள்ள அனிகாவுக்கு கூட, தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஹீரோயின்கள் வாய்ப்பு கிடைத்த நிலையில் இதுவரை தமிழில் கிடைக்க வில்லை.

தமிழில் இவர் ஹீரோயினாக விரைவில் அறிமுகமாக உள்ளதாக சில பேச்சுகள் அடிபட்டு வரும் நிலையில்... தன்னை குழந்தை நட்சத்திரமாக பார்த்து ரசித்த ரசிகர்களின் மனநிலையை மாற்றும் விதமாக அவ்வப்போது விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா சுரேந்திரன். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற சல்வாரில்... கச்சிதமாக தன்னுடைய அழகை வெளிப்படுத்தியுள்ள இவரின் புகைப்படத்திற்கு கண்ணு பட்டுட்ட போகுது... சுத்தி போடுங்கள் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

சன் டிவிக்கு தயாரான சூப்பர் ஹிட் சீரியல்..! சமயம் பார்த்து தட்டி தூக்கிய விஜய் டிவி! எந்த தொடர் தெரியுமா?

Latest Videos

click me!