‘தலைவர் 169’ படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது போல... ரஜினியின் பேவரைட் காமெடியனை களமிறக்கும் நெல்சன்

Ganesh A   | Asianet News
Published : Mar 02, 2022, 04:12 PM IST

Thalaivar 169 Update : விஜய்யின் பீஸ்ட் (Beast) படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன், அடுத்ததாக ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

PREV
15
‘தலைவர் 169’ படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது போல... ரஜினியின் பேவரைட் காமெடியனை களமிறக்கும் நெல்சன்

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த. சிவா இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இருப்பினும் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அடுத்த பட தேர்வில் மிகவும் கவனமாக இருந்த ரஜினி பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார்.

25

அந்த வகையில் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்குபவர்கள் பட்டியலில்  'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, கேஎஸ் ரவிக்குமார்,  கார்த்திக் சுப்புராஜ், பாண்டிராஜ், வெங்கட்பிரபு, மிஷ்கின் (mysskin) என பல்வேறு பெயர்கள் அடிபட்ட வண்ணம் இருந்தன.

35

இந்த லிஸ்டில் கடைசியாக சேர்ந்தவர் நெல்சன் (Nelson). தற்போது விஜய்யின் பீஸ்ட் (Beast) படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன், அண்மையில் ரஜினியை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். அந்தக்கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போக, காத்திருந்த இயக்குனர்களையெல்லாம் கழட்டிவிட்டு, நெல்சனுக்கு ஓகே சொல்லிவிட்டார் ரஜினி.

45

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைக்க உள்ளார். மேலும் ரஜினி கோர்ட் சூட் அணிந்து கெத்தான தோற்றத்தில் இருக்கும் மாஸ் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

55


இந்நிலையில், தலைவர் 169 படத்தில் ரஜினியுடன் நடிக்க உள்ள இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்க நடிகர் வடிவேலுவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வடிவேலு - ரஜினிகாந்த் கூட்டணியில் இதற்கு முன் வெளியான படங்களில் நகைச்சுவை காட்சிகள் வேறலெவலில் ஹிட் ஆனதால், தலைவர் 169 படத்திலும் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Naaisekar Returns movie : வடிவேலு படத்தில் கமிட் ஆன ஷிவானி... காமெடி படத்தில் இவருக்கு இப்படி ஒரு வேடமா?

Read more Photos on
click me!

Recommended Stories