தினமும் சரக்கடிப்பேன், கணக்கே இல்லாம சிகரெட் பிடிப்பேன்... என்னை அன்பால் மாற்றியவர் என் மனைவி லதா- ரஜினிகாந்த்

First Published | Jan 27, 2023, 7:43 AM IST

தினமும் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது என பல்வேறு கெட்ட பழக்கங்களுடன் இருந்த தன்னை தனது மனைவி லதா தான் மாற்றி நல்வழிப்படுத்தினார் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஒய்ஜி மகேந்திரன் புதிதாக ஷார்ப் புரொடக்‌ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதன்மூலம் சாருகேசி என்கிற படத்தையும் தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்து, தன் மனைவி குறித்து எமோஷனலாக பேசினார்.

அவர் பேசியதாவது : “லதாவை எனக்கு அறிமுகப்படுத்தியது ஒய்ஜி மகேந்திரன் தான். எங்களுக்கு கல்யாணம் நடக்க அவர் தான் முக்கிய காரணம். இப்போது எனக்கு வயது 73-ஐ கடந்தாலும், இவ்ளோ ஆரோக்கியமாக நான் இருப்பதற்கு காரணமே என்னுடையை மனைவி லதா தான். நான் கண்டெக்டராக இருக்கும்போது சில கெட்ட சினேகிதர்கள் சகவாசத்தால், பல கெட்ட பழக்கங்கள் எல்லாம் எனக்கு இருந்தது.

Tap to resize

கண்டெக்டராக இருக்கும்போதே தினமும் ரெண்டு வேளையும் அசைவம் தான் சாப்பிடுவேன். தினமும் தண்ணி அடிப்பேன். சிகரெட் எத்தனை பாக்கெட் பிடிப்பேன்னு தெரியாது. கண்டெக்டராக இருக்கும்போதே இப்படி, இதன்பின் நடிகனாகி பணம், பெயர், புகழ் வந்ததும் காலையிலேயே ஆட்டுக்கால் பாயா, ஆப்பம், சிக்கன் 65 போன்றவை தான் சாப்பிடுவேன். அப்போதெல்லாம் சைவம் சாப்பிடுபவர்களையெல்லாம் பார்த்தால் பாவமா இருக்கும்.

இதையும் படியுங்கள்... உலகில் முதல் முறையாக நடிகர்களே இல்லாத படம்! 'ஓநாய்கள் ஜாக்கிரதை' பட இயக்குனரின் சாதனை முயற்சி!

சரக்கு, சிகரெட், அசைவ உணவு இதெல்லாம் மோசமான காம்பினேஷன். இதனை அளவுக்கு மீறி பல வருடங்களாக சாப்பிட்டவர்கள் யாரும், எனக்கு தெரிந்தவரை 60 வயசு வரைக்கும் ஆரோக்கியமாக வாழ்ந்ததே கிடையாது. அதற்கு உள்ளே போயிட்டாங்க. அப்படி 60 வயசுக்கு மேல வாழ்ந்தாலும், நடமாட முடியாமல், படுத்த படுக்கையா தான் இருக்காங்க. இதற்கு நிறைய பேரை உதாரணமாக சொல்லலாம், ஆனா நான் என் வாயால் சொல்ல விரும்பவில்லை.

அந்த மாதிரி இருந்த என்னை அன்பாலே மாற்றியவர் என் மனைவி லதா. இந்த மாதிரி கெட்ட பழக்கங்களை யார் சொன்னாலும் விட முடியாது. அவ்ளோ அன்பா என்னை மாற்றி, சரியான மருத்துவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களை சொல்ல வைத்து, என்னை ஒரு பக்குவத்துக்கு கொண்டு வந்ததே லதா தான். என்னுடைய பழைய படங்கள் பார்த்தாலே உங்களுக்கு தெரியும், கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேன், கல்யாணத்துக்கு பின் எப்படி இருந்தேன் என்று. இப்படி ஒருவரை எனது மனைவியாக்கியதற்கும் ஒய்.ஜி.மகேந்திரன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார். ரஜினியின் இந்த பேச்சைக் கேட்டு அவரது மனைவி லதா, கண்கலங்கினார்.

இதையும் படியுங்கள்... சிருஷ்டி டாங்கே, அதிதி ஷங்கர், என ஹீரோயின்ஸ் களமிறங்கும் 'குக் வித் கோமாளி' சீசன் 4! போட்டியாளர்கள் முழு லிஸ்ட

Latest Videos

click me!