Published : Mar 20, 2025, 01:14 PM ISTUpdated : Mar 20, 2025, 04:09 PM IST
டி ராஜேந்தர் இயக்கிய படத்தில், ரஜினிகாந்த் நடிக்க மறுத்த நிலையில் அந்தப் படத்தில் தானே ஹிரோவாக நடித்து படத்தையும் ஹிட் கொடுத்துள்ளார். அது எந்த படம் தெரியுமா?
டி.ராஜேந்தரை சிம்புவின் அப்பாவாகத்தான் இன்றைய 2K -கிட்ஸ்களுக்கு தெரியும். ஆனால், அவர் ஒரு இசையமைப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பன்முக கலைஞராக கலக்கிவையர் என்பதை 80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ் நன்கு அறிவார்கள்.
இவர் முடியை விசிறி கொண்டு... டன்டனகா டானுக்குனக்கா என உடல் மொழியோடு அட்ட டைமில் அடுக்கு மொழியில் வசனங்களை பேசி ஆச்சயப்படுத்துபவர். அதே போல் எந்த வித இசை கருவியே இல்லாமல் வாயாலே தாளம் போடக் கூடியவர் திறமையாளர்.
26
நடிகைகள் மீது விரல் கூட படாமல் அவர்களை வைத்து படம் எடுக்கக்கூடிய இயக்குனர்
தன்னுடைய படங்களில் எந்தவித ஆபாச காட்சியோ வசனங்களோ இல்லமல் தான் படம் எடுக்க வேண்டும் என கொள்கையோடு படம் இயக்கி - தயாரித்தவர் எனவே இவரின் படங்களை குடும்பமாக பார்த்து கொண்டாடினார்கள் ரசிகர்கள். ஹீரோயின்கள் மீது தன்னுடைய சுண்டி விரல் கூட படாமல் நடிக்க வைப்பவர். இதன் காரணமாகவே இவருடைய படங்களில் நடிக்க பல நடிகைகள் அதிகம் விரும்புவது உண்டு. ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றாப்போல்... காதல் கதைகள், அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் என இவர் எடுத்த படங்கள் இன்று வரை தனித்துவமான படைப்புகளாகவே பார்க்கப்படுகிறது.
தன்னுடைய படங்களில் எந்தவித ஆபாச காட்சியோ வசனங்களோ இல்லமல் தான் படம் எடுக்க வேண்டும் என கொள்கையோடு படம் இயக்கி - தயாரித்தவர் எனவே இவரின் படங்களை குடும்பமாக பார்த்து கொண்டாடினார்கள் ரசிகர்கள். ஹீரோயின்கள் மீது தன்னுடைய சுண்டி விரல் கூட படாமல் நடிக்க வைப்பவர். இதன் காரணமாகவே இவருடைய படங்களில் நடிக்க பல நடிகைகள் அதிகம் விரும்புவது உண்டு. ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றாப்போல்... காதல் கதைகள், அண்ணன் – தங்கை செண்டிமெண்ட் என இவர் எடுத்த படங்கள் இன்று வரை தனித்துவமான படைப்புகளாகவே பார்க்கப்படுகிறது.
46
டி ராஜேந்தர் படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்
குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான என் தங்கை கல்யாணி, ஒரு தலை ராகம், தங்கைக்கோர் கீதம், மைதிலி என்னை காதலி, உயிருள்ளவரை உஷா, நெஞ்சில் ஓர் ராகம், போன்றவை 100 நாட்களை கடந்து ஓடியது. அமலா, நளினி, மும்தாஜ் போன்ற பல நடிகைகளை அறிமுகம் செய்து வைத்தவரும் இவர் தான்.
டி ராஜேந்தர் எடுத்து ஹிட் கொடுத்த ஒரு படத்திற்கு தனது காதல் மனைவியின் பெயரை வைத்தார். அந்தப் படம் தான் உயிருள்ளவரை உஷா. இந்தப் படத்திற்கான கதையை ரஜினியை மனதில் வைத்தே டிராஜேந்தர் எழுதி உள்ளார். இந்தப் படத்தில் அவரைத் தான் ஹீரோவாக நடிக்க வைக்க நினைத்தாராம். ஆனால், கதையை கேட்ட ரஜினிகாந்த், பலமுறை இவரை அலைக்கழித்து பின்னர் வேறு சில படங்களில் நடித்து வருவதால் முடியாது என கூறி கைவிரித்துள்ளார்.
பின்னர் இந்தப்படத்தில் தானே ஹீரோவாக அறிமுகமாக முடிவு செய்தார் டி.ராஜேந்தர். பிரபல நடிகை நளினி ஹீரோயினாக இந்த படத்தில் அறிமுகமானார். இந்தப்படத்தை தனது தஞ்சை சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்கவும் செய்திருந்தார். இந்தப் படத்திற்கு இசையும் டி ராஜேந்தர் தான்.
66
ஹீரோவாக இறங்கி மாஸ் ஹிட் கொடுத்த டி ராஜேந்தர்:
இப்படி ஒரே படத்தில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என்று தனது மொத்த வித்தையையும் காட்டினார். இந்தப் படத்தில் அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே, இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி கனவில் வந்தாலோ, கடி அடிப்போம் கட் அடிப்போம் காலேஜூக்கு, வைகை கரை காற்றே என்று பல பாடல்கள் இடம் பெற்றிருந்தது. இந்த பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்கள். வைகை கரை காற்றே என்ற பாடலுக்கு எப்படி டியூன் போட்டார் என்பது குறித்து கூட யேசுதாஸ் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசியிருப்பார்.
இந்தப் படம் கொடுத்த மாஸ் வரவேற்புக்கு பிறகு உயிருள்ளவரை உஷா கன்னடம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 3 மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. அங்கும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.