- Home
- Gallery
- Simbu : மருமகனுக்கு பிறந்தநாள்.. பரிசுகளை அடுக்கி சேட்டை செய்த "சிம்பு மாமா" - வைரல் பிக்ஸ் இதோ!
Simbu : மருமகனுக்கு பிறந்தநாள்.. பரிசுகளை அடுக்கி சேட்டை செய்த "சிம்பு மாமா" - வைரல் பிக்ஸ் இதோ!
Actor Simbu : பிரபல நடிகர் சிலம்பரசன், 7வது பிறந்த நாளை கொண்டாடும் தனது மருமகனுக்கு பல பரிசு பொருட்களை கொடுத்து அசத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.

Ilakkiya Rajendar Son
கடந்த 1983ம் ஆண்டு பிறந்த பிரபல நடிகர் சிம்புவுக்கு வயது 41, பிரபல இயக்குனர் டி ராஜேந்தரின் மூத்த மகன் தான் அவர். நடிகர் சிம்புவுக்கு ஒரு தம்பியும், ஒரு தங்கையும் உள்ளனர். அவர்கள் இருவருமே திருமணமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"போட்" நாயகனுக்கு பிறந்தநாள்.. "வாடா வா" பாடலை வெளியிட்டு வாழ்த்து சொல்லும் படக்குழு - Promo இதோ!
STR
நடுப் பிள்ளை குறளரசன், குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு திருமணமான நிலையில், தற்பொழுது அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
Actor STR
அதேபோல சிம்புவின் தங்கை இலக்கியாவிற்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. தற்பொழுது 7 வயதில் அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். அந்த 7 வயது மருமகனின் பிறந்தநாள் விழாவில் தான் பங்கேற்று அசத்தியுள்ளார் மாமா சிம்பு.
Actor Simbu
தனது மருமகனுக்கு பரிசுகளை அடுக்கி அவரை கலாய்த்த சிம்பு, பின் அவரை கட்டியணைத்து தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். மாமன், மருமகன் பாசம் ததும்பும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.