Tamil Actress Harmone Injection Rumours : குழந்தை நட்சத்திரமாக வாழ்க்கையைத் தொடங்கி, கதாநாயகியாக உயர்ந்தவர்கள் திரையுலகில் பலர் உள்ளனர். ஸ்ரீதேவி முதல் மீனா வரை பல அழகு தேவதைகள் வெள்ளித்திரையில் குழந்தை முதலே நடித்து முத்திரையை பதித்துள்ளனர். அந்த வரிசையில் வருபவர்தான் மேலே உள்ள படத்தில் இருக்கும் நடிகையும். இவர் 12 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 16 வயதிலேயே கதாநாயகியாகிவிட்டார்.
26
Tamil Actress Who debut at age of 16
கதாநாயகியாக முதல் படம் தெலுங்கில் நடித்தார். ஆனால், இந்த நேரத்தில் இவர் பல விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சிறிய வயதிலேயே பெரியவளாக காட்டிக்கொள்ள அவரது அம்மா ஹார்மோன் ஊசி போட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், அதில் உண்மை இல்லை என்று மறுத்துவிட்டார். இந்த ஹீரோயின் யார் என்று தெரிகிறதா?
36
Hansika
ஆம், அந்த சிறுமி வேறு யாருமல்ல, நடிகை ஹன்சிகா மோத்வானி தான். 2003 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஹவா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஹன்சிகா. அதன் பிறகு கோயி மில் கயா, ஜாகோ, ஹம் கௌன் ஹை, அப்ரகதப்ரா போன்ற படங்களில் நடித்தார். 2007 ஆம் ஆண்டு தன்னுடைய 16 வயதில் அல்லு அர்ஜுன் ஜோடியாக தேசமுதுரு படத்தில் நடித்து அசத்தினார்.
முதல் படத்திலேயே தன்னுடைய அசத்தலான நடிப்பால் இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார் ஹன்சிகா. முதல் படத்திலேயே சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் அவர் வென்றார். அதன் பிறகு கோலிவுட் பக்கம் தாவிய ஹன்சிகா, இங்கு தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து விஜய்யுடன் வேலாயுதம், சூர்யா ஜோடியாக சிங்கம் 2, சிவகார்த்திகேயனின் மான் கராத்தே போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையானார் ஹன்சிகா.
56
Hansika Controversy
பின்னர் தமிழில் ஹன்சிகா நடிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் அவருக்கு பட வாய்ப்புகளும் கணிசமாக குறையத் தொடங்கின. வெற்றி பெறவில்லை. இதனால் தன்னுடைய காதலனை கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் ஹன்சிகா. இவரது காதல் கணவரின் பெயர் சோஹைல் கத்தூரியா. திருமணத்துக்கு பின்னரும் நடித்து வரும் ஹன்சிகா, தற்போது தமிழில் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
66
Hansika Clarification
தொழில் ரீதியாக தோல் சிறப்பு நிபுணரான ஹன்சிகாவின் தாய் மோனா மோத்வானி, ஹன்சிகாவை கதாநாயகியாக்க ஹார்மோன் ஊசி போட்டதாக பெரிய அளவில் வதந்திகள் பரவின. இது குறித்து சமீபத்தில் ஹன்சிகா விளக்கம் அளித்தார். அவை அனைத்தும் வதந்திகளே என்றும், அது தன்னை அதிகம் பாதிக்கவில்லை என்றாலும், தனது தாய் மிகவும் வேதனை அடைந்ததாக கூறினார். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆதாரமற்ற கதைகளை எழுதுவது சரியல்ல என்று ஹன்சிகா கூறினார். படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.