சூர்யா மற்றும் தனுஷ் பட வாய்ப்புகளை அடுத்தடுத்து தட்டி தூக்கிய 23 வயது நடிகை!

Published : Mar 20, 2025, 11:51 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் தனுஷ் மற்றும் சூர்யாவுக்கு ஜோடியாக 23 வயது நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
சூர்யா மற்றும் தனுஷ் பட வாய்ப்புகளை அடுத்தடுத்து தட்டி தூக்கிய 23 வயது நடிகை!

Suriya and Dhanush Pair up With 23 Year Old Actress : தனுஷ், சூர்யா இருவருமே கோலிவுட்டில் பிசியான நடிகர்களாக வலம் வருகிறார்கள். இதில் தனுஷ் நடிப்பில் தற்போது இட்லி கடை திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி தனுஷே இயக்கியும் உள்ளார். இதுதவிர தெலுங்கில் குபேரா, இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் ராஞ்சனா 2, தமிழில் மாரி செல்வராஜ், விக்னேஷ் ராஜா, அருண் மாதேஸ்வரன் போன்ற இயக்குனர்களின் படம் என தனுஷின் லைன் அப் நீண்டுகொண்டே செல்கிறது. 

24
Mamitha Baiju

அதேபோல் நடிகர் சூர்யாவும் தற்போது செம பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற மே மாதம் 1ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதுதவிர வெற்றிமாறனின் வாடிவாசல் படம் மற்றும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படமும் நடிகர் சூர்யா கைவசம் உள்ளது.

இதையும் படியுங்கள்... Rajinikanth: நடிகையுடன் சேர்ந்து ஆட்டம் காட்டிய தனுஷ்; மகளுக்காக சுயரூபத்தை காட்டி துணிந்த ரஜினிகாந்த்!

34
Mamitha Baiju Movie Line Up

இந்நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்களில் ஹீரோயினாக நடிக்க 23 வயது இளம் நாயகி ஒருவர் கமிட்டாகி உள்ளாராம். அவர் வேறுயாருமில்லை நடிகை மமிதா பைஜு தான். மலையாளத்தில் வெளியான பிரேமலு படம் மூலம் பேமஸ் ஆன மமிதா, தமிழில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக ரெபல் படத்தில் நடித்தார். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் ஜன நாயகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மமிதா.

44
Mamitha Baiju Upcoming Movies

இதுதவிர விஷ்ணு விஷால் ஜோடியாக இரண்டு வானம் என்கிற படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில், அவருக்கு தமிழில் அடுத்தடுத்து 2 ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் ஒன்று போர்த் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு. மற்றொன்று வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்க உள்ள படத்திலும் மமிதா தான் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... நான் அப்படி செஞ்சது உண்மை தான் ஆனால்; மாமிதா பைஜூவை அடித்த விவாகரம்! பாலா கூறிய விளக்கம்!

Read more Photos on
click me!

Recommended Stories