
March 21 OTT Release Movies : ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருவதால் அடுத்தவாரம் விக்ரம் நடித்த வீர தீர சூரன், மோகன்லாலின் எம்புரான் போன்ற பிரம்மாண்ட படங்கள் திரைக்கு வருகின்றன. இதனால் மார்ச் 21ந் தேதி பெரிய படங்கள் தமிழில் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டரில் பெரிய படங்கள் வராவிட்டாலும் ஓடிடியில் இந்த வாரம் சில சூப்பர்ஹிட் படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அது என்னென்ன படங்கள்... எந்தெந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த படம் டிராகன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் கயாடு லோகர், அனுபமா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். டிராகன் திரைப்படம் 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், அப்படத்தை மார்ச் 21ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.
டிராகன் படத்துக்கு போட்டியாக தியேட்டரில் ரிலீஸ் ஆன நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம், தற்போது ஓடிடியிலும் அப்படத்திற்கு போட்டியாக களமிறங்குகிறது. டிராகன் படத்துக்கு கிடைத்த வரவேற்பால் தனுஷின் நீக் படம் காணாமல் போனது. இதனால் இப்படத்தை ஓடிடியில் அதிகளவிலான ரசிகர்கள் பார்க்க வாய்ப்பு உண்டு. நீக் திரைப்படம் மார்ச் 21ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
ஜெய் மற்றும் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்த படம் பேபி அண்ட் பேபி. இப்படம் பிப்ரவரி 14ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆனது. காமெடிப்படமான இதில் ஜெய்க்கு ஜோடியாக பிரக்யா நக்ரா நடித்திருந்தார். இப்படத்தில் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மார்ச் 21ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன நடிகை லாஸ்லியாவும், யூடியூப் பிரபலமான ஹரி பாஸ்கரும் ஜோடியாக நடித்த திரைப்படம் தான் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங். இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படம் ஜனவரி 24ந் தேதி திரைக்கு வந்தது. இந்நிலையில், இப்படம் மார்ச் 21ந் தேதி டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... தியேட்டரில் மரண அடி கொடுத்த டிராகன் படத்துக்கு போட்டியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் நீக்!
ஜே.எஸ்.கே இயக்கத்தில் பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்த படம் ஃபயர். இப்படத்தில் ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் பிப்ரவரி 14ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆன நிலையில், தற்போது டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் மார்ச் 21 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
ஜி ஷங்கர் இயக்கத்தில் உருவான படம் தினசரி. இசைஞானி இளையராஜா இசையமைத்த இப்படத்தை சிந்தியா தயாரித்ததோடு, இப்படத்தில் ஹீரோயினாகவும் நடித்திருந்தார். இப்படத்தில் நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்திருந்தார். இப்படம் காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆன நிலையில், தற்போது ஓடிடிக்கு வந்துள்ளது. இப்படம் மார்ச் 21ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
மலையாளத்தில் ஆஃபீஸர் ஆன் டியூட்டி திரைப்படம் மார்ச் 20ந் தேதி முதல் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. தெலுங்கில் பிரம்மானந்தம் படம் ஆஹா ஓடிடி தளத்தில் 21ந் தேதி வெளியாகிறது. இந்தியில் கிரைம் பேட்ரோல், கன்னேடா போன்ற வெப் தொடர்கள் நெட்பிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் மார்ச் 21 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. ஆஸ்கர் விருது வென்ற அனோரா திரைப்படம் இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... Anora OTT : ஆஸ்கரில் 5 விருதை வென்ற 'அனோரா' படம் ஓடிடியில் ரிலீஸ்!