Published : Mar 20, 2025, 07:52 AM ISTUpdated : Mar 20, 2025, 07:54 AM IST
நடிகர் மற்றும் நடன இயக்குனருமான பிரபு தேவா திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று பிரார்த்தனை செய்தார்.
Prabhu Deva Visits Tirupati Temple : பிரபு தேவா இந்தியாவின் மிகவும் பிரபலமான நடன இயக்குனர்களுள் ஒருவர் ஆவார். இதுதவிர இயக்குனர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் பிரபுதேவாவை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அழைக்கின்றனர். பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள பிரபுதேவா சிறந்த நடனத்திற்காக இரண்டு முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். நடனத்தைத் தவிர, பிரபு தேவா பல வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
24
Prabhu Deva
தமிழில், விஜய் நடித்த போக்கிரி, வில்லு, ரவி மோகனின் எங்கேயும் காதல் மற்றும் விஷாலின் வெடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து சல்மான் கான் நடித்த 'வான்டட்' படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பின்னர் ரவுடி ரத்தோர், ஆர். ராஜ்குமார் மற்றும் சிங் இஸ் பிளிங் போன்ற வெற்றிகரமான படங்களை இயக்கிய அவர் தற்போது நடிப்பில் பிசியாக உள்ளார்.
இந்நிலையில் பிரபு தேவா திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் சென்று பிரார்த்தனை செய்துள்ளார். இந்த கோவில், இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் மதத் தலங்களில் ஒன்றாகும். இது ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. எளிய வெள்ளை நிற உடையில் இருந்த நடன இயக்குனர், கோவிலுக்கு வெளியே இருந்த புகைப்படக் கலைஞர்களை செவ்வாய்க்கிழமை வரவேற்றார். பிரபு தேவா ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
44
Prabhu Deva Wife and Daughter
இந்த ஆண்டு பிப்ரவரியில், பிரபு தேவா தனது மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவை ஒரு எனர்ஜியான நடன வீடியோ மூலம் அறிமுகப்படுத்தினார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தந்தை-மகன் இருவரும் கான்சர்ட் ஒன்றில் இணைந்து நடனமாடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பிரபு தேவாவும் அவரது மகனும் மேடையில் நடனமாட, ரசிகர்கள் அவர்களை உற்சாகப்படுத்தினர். விரைவில் பிரபுதேவாவின் மகன் சினிமாவில் களமிறங்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.