Me Too Moment: ரஜினி பட வில்லன் மீது விஷால் ஹீரோயின் கூறிய மீடூ புகார்! முழு விவரம் இதோ!
ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் நானா படேக்கர் மீது, தனுஸ்ரீ தத்தா கொடுத்த சர்ச்சை புகார் குறித்து, இந்த பதிவில் பார்க்கலாம்.
ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் நானா படேக்கர் மீது, தனுஸ்ரீ தத்தா கொடுத்த சர்ச்சை புகார் குறித்து, இந்த பதிவில் பார்க்கலாம்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து தற்போது, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் தான் நானா படேக்கர். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த, 'கபாலி' திரைப்படம் மிகவும் பிரபலம். இவரை பற்றி கடந்த 2018-ஆம் ஆண்டு பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய மீடூ குற்றச்சாட்டு பாலிவுட் திரையுலகை தாண்டி தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனுஸ்ரீ தத்தா, தமிழில், விஷால் நடிப்பில் வெளியான 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். இதை தொடர்ந்து, மற்ற மொழிகளில் நடித்ததால் தமிழ் படங்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. இவர் நானா படேகர் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீது முன் வைத்த குற்றச்சாட்டு குறித்து பார்க்கலாம்.
மீடூ புகார் கொடுத்ததால் விஷம் வச்சு கொல்லப்பாத்தாங்க... விஷால் பட நடிகை பகீர் புகார்
2018-ஆம் ஆண்டு ஹார்ன் 'ஓகே ப்ளீஸ்' படப்பிடிப்பின் போது, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் தனுஸ்ரீ தத்தா கூறிய நிலையில், இதனை படக்குழு தரப்பில் இருந்து நானா படேகர் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா ஆதாரமற்ற தகவல் என மறுத்தனர்.
நடிகை தனுஸ்ரீ தத்தா, கூற்றுப்படி பாலிவுட் மூத்த நடிகர் நானா படேகர் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா திரைப்படத்தில், ஒரு நெருக்கமான காட்சி மற்றும் நடனத்திற்காக தன்னை வற்புறுத்தியதாக கூறினார். ஆனால் தன்னை படத்தில் கமிட் செய்யும் போது தனக்கு இப்படி ஒரு காட்சி இருப்பதாக அவர்கள் வைக்கவில்லை என கூறினார்.
தனக்கு விருப்பம் இல்லை என கூறிய பின்னரும் நானா படேகர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் இதற்காக தன்னை நிறைய வற்புறுத்தியதாக தனுஸ்ரீ அப்போது குற்றம் சாட்டியிருந்தார். பின்னர், இந்த விஷயம் மீ டூ இயக்கமாக உருவெடுத்தது. நானா படேகர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்ததோடு. இது தொடர்பாக தனக்கு எந்த சட்டப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்று அவர் கூறியிருந்தார்.
மேலும் தனுஸ்ரீ தத்தா நானா படேகர் மீது சினி மற்றும் தொலைக்காட்சி கலைஞர்கள் சங்கத்தில் (CINTAA) புகார் அளித்தார். இதற்குப் பிறகு, தனுஸ்ரீ திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டு ராக்கி சாவந்த் அவருக்கு பதிலாக நடிக்க வைக்கப்பட்டார். எந்த வித ஆதாரமும் இன்றி, இப்படி ஒரு குற்றச்சாட்டை முன் வைத்ததற்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, அவர் சட்ட ரீதியாக சிக்கலை அனுபவித்தார்.
’அவசரப்பட்டு நானா படேகரை நிரபராதியாக்கத் துடிக்கிறார்கள்’...தனுஸ்ரீ தத்தா மறு ஆவேசம்...
இந்த விஷயத்தால் தனுஸ்ரீ தத்தா பல பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. இது அவரது மன ஆரோக்கியத்தில் அதிகம் பாதித்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னரே திரையுலகில் இருந்து விலகி ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்த துவங்கினார்.
அந்த நேரத்தில் கங்கனா ரனாவத், பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர் போன்ற முன்னணி நடிகைகள் தனுஸ்ரீ தத்தாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அனைவரும் ஒருமித்த குரலில் தனுஸ்ரீக்கு முழு ஆதரவு அளித்தனர். இருப்பினும், தனுஸ்ரீ இந்த சர்ச்சைக்குப் பிறகும் நானா படேகருடன் தொடர்ந்து சில படங்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.