Rajinikanth : படம் பார்த்ததும் நச்சுனு ஒரே வார்த்தையில் கமெண்ட் சொல்லி விக்ரம் படக்குழுவை குஷியாக்கிய ரஜினி

Published : Jun 05, 2022, 11:35 AM IST

Rajinikanth : விக்ரம் படத்தை நேற்று திரையரங்கில் பார்த்து ரசித்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரை போனில் அழைத்து பாராட்டி உள்ளார்.

PREV
14
Rajinikanth : படம் பார்த்ததும் நச்சுனு ஒரே வார்த்தையில் கமெண்ட் சொல்லி விக்ரம் படக்குழுவை குஷியாக்கிய ரஜினி

கமல் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியாகி உள்ள படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் கடந்த ஜூன் 3-ந் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. கமல், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய மாஸ் கூட்டணியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருவதோடு பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது.

24

அதன்படி விக்ரம் படம் வெளியான இரண்டே நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இன்றும் விடுமுறை நாள் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழுவும் உற்சாகமடைந்துள்ளனர்.

34

இந்நிலையில், விக்ரம் படத்தை நேற்று திரையரங்கில் பார்த்து ரசித்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவை பாராட்டி உள்ளார். முதலில் அவரின் நண்பரும் நடிகருமான கமல்ஹாசனை போனில் தொடர்பு கொண்டு பேசிய ரஜினி படம் சூப்பர்... சூப்பர்... சூப்பர் என தன் ஸ்டைலில் சொல்லி உள்ளார். இதற்கு கமலும் நன்றி தெரிவித்துள்ளார்.

44

அதுபோல இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் மகேந்திரன் ஆகியோரையும் போனில் தொடர்பு கொண்டு பாராட்டி உள்ளார் ரஜினி. சூப்பர்ஸ்டாரின் இந்த வாழ்த்து படக்குழுவுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளதாம்.

இதையும் படியுங்கள்... Suriya : விக்ரம் படத்தில் ரோலெக்ஸாக மாஸ் காட்டிய சூர்யா! 5 நிமிட ரோலுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories