Legend saravanan : முதல் படத்திலேயே அஜித்தை ஓரங்கட்டிய அண்ணாச்சி... லெஜண்ட் டிரைலர் படைத்த வேறலெவல் சாதனை

Published : Jun 05, 2022, 10:00 AM IST

Legend saravanan : சரவணன் நடித்துள்ள லெஜண்ட் படத்தின் டிரைலர் யூடியூப்பில் 25 மில்லியனுக்கு மேல் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

PREV
14
Legend saravanan : முதல் படத்திலேயே அஜித்தை ஓரங்கட்டிய அண்ணாச்சி... லெஜண்ட் டிரைலர் படைத்த வேறலெவல் சாதனை

பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன், நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தன் கடை விளம்பரங்களில் நடித்து வந்தார். அதன்மூலம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆன அவர் தற்போது சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். தமிழ் திரையுலகில் அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்துக்கு ‘தி லெஜண்ட்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

24

உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய ஜேடி மற்றும் ஜெர்ரி இப்படத்தை இயக்கி உள்ளனர். லெஜண்ட் சரவணன் சயிண்டிஸ்ட்டாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார். மேலும் விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

34

லெஜண்ட் படத்தின் டிரைலர் சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் பாலிவுட், டோலிவுட், என பல்வேறு திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகைகள் கலந்துகொண்டதை பார்த்து கோலிவுட்டே வியப்பில் ஆழ்ந்தது. இப்படத்தின் டிரைலரும் அதிரடி ஆக்‌ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என பக்கா கமர்ஷியல் அம்சத்தோடு பிரம்மாண்டமாக இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது.

44

இந்நிலையில், லெஜண்ட் படத்தின் டிரைலர் யூடியூப்பில் 25 மில்லியனுக்கு மேல் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதன்மூலம் அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட சாதனையை லெஜண்ட் டிரைலர் முறியடித்துள்ளது. நேர்கொண்ட பார்வை பட டிரைலர் இதுவரை யூடியூப்பில் 19 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், லெஜண்ட் டிரைலர் அதனை பீட் பண்ணி உள்ளது.

இதையும் படியுங்கள்... நயன்தாரா திருமணத்தை படமாக்க கவுதம் மேனனை களமிறக்கிய பிரபல ஓடிடி தளம்! அட... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

click me!

Recommended Stories