நயன்தாரா திருமணத்தை படமாக்க கவுதம் மேனனை களமிறக்கிய பிரபல ஓடிடி தளம்! அட... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

First Published Jun 5, 2022, 9:18 AM IST

Gautham Menon : தமிழ் சினிமாவில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் கவுதம் மேனன், தற்போது நயன் - விக்கியின் திருமணத்தை படமாக்க களமிறங்கியது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. 

மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என காலத்தால் அழியாத பல்வேறு காதல் படங்களைக் கொடுத்து இளைஞர்களின் பேவரைட் இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன். சமீபகாலமாக இவர் இயக்கிய படங்கள் எதுவும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் அவரது கெரியர் சற்று தொய்வை சந்தித்துள்ளது.

தற்போது இயக்குனர் கவுதம் மேனன் கைவசம் ஜோஸ்வா, விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம், சிம்புவின் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் உள்ளன. இதில் ஜோஸ்வா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. வெந்து தணிந்தது காடு திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

தமிழ் சினிமாவில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் கவுதம் மேனன், தற்போது திருமணம் ஒன்றை படமாக்க களமிறங்கியது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் வருகிற ஜூன் 9-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த திருமணத்தை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் அதிக தொகைக்கு வாங்கி உள்ளது.

இதற்காகத் தான் கவுதம் மேனனை களமிறக்கி உள்ளனர். அவர் தலைமையிலான குழு தான் நயன் - விக்கி திருமணத்தை படமாக்க உள்ளது. இந்த தகவல் அறிந்து ஷாக் ஆகிப்போன கவுதம் மேனனின் ரசிகர்கள், அவரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தயவு செய்து இதுபோன்று செய்யாதீர்கள் என வலைதளங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... முதல்வருக்கு முதல் பத்திரிக்கை... ஜோடியாக வந்து திருமணத்துக்கு அழைப்பு விடுத்த விக்கி - நயன் ஜோடி

click me!