முதல்வருக்கு முதல் பத்திரிக்கை... ஜோடியாக வந்து திருமணத்துக்கு அழைப்பு விடுத்த விக்கி - நயன் ஜோடி

Published : Jun 05, 2022, 08:27 AM IST

Nayanthara Marriage : நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நேற்று இரவு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர். 

PREV
14
முதல்வருக்கு முதல் பத்திரிக்கை... ஜோடியாக வந்து திருமணத்துக்கு அழைப்பு விடுத்த விக்கி - நயன் ஜோடி

நடிகை நயன்தாரா கடந்த 2015-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார். 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இவர்களின் காதல் விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளது. வருகிற ஜூன் 9-ந் தேதி விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ளது.

24

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் விக்கி - நயனின் திருமணம் நடைபெற உள்ளது. இதில் குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளனர். இதையடுத்து நடக்க உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

34

இதற்காக அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் உள்பட பல்வேறு முன்னணி நடிகர், நடிகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாம். இந்த திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பிரபல ஓடிடி தளம் ஒன்று பல கோடி கொடுத்து வாங்கி உள்ளதால், மிகவும் ஆடம்பரமாக காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

44

இந்நிலையில், நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நேற்று இரவு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது திருமணத்திற்கான அழைப்பிதழையும் அவரிடம் வழங்கினர். இந்த நிகழ்வின் போது நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார். அப்போது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Jawan : ஜவானும் காப்பியா... பாலிவுட்டிலும் வேலையை காட்டிய அட்லீ - பொளந்துகட்டும் நெட்டிசன்கள்

Read more Photos on
click me!

Recommended Stories