ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரமாம். இதற்காக உடல் எடையை குறைத்துள்ள அஜித் நீண்ட தாடி, காதில் கடுக்கன் என செம்ம கெத்தான தோற்றத்திற்கு மாறி உள்ளார். அவரின் இந்த கெட் அப் செம்ம மாஸாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.