ஜெயிலர் படம் குறித்த புதிய அப்டேட்டாக இந்த படம் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் படப்பிடிப்புக்கு வரும் என தெரிகிறது. இதற்காக சென்னைக்கு அருகில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
jailer movie will have big set in ramoji rao film city shoot from august
கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து விஜயின் பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். ராணுவ அதிகாரியாக விஜய் நடித்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதற்கென டெல்லியில் பிரம்மாண்ட மால் போன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் நல்ல கலெக்ஷனை கொண்டது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான பீஸ்ட்டை தொடர்ந்து மீண்டும் அதே தயாரிப்பில் நெல்சன் கமிட் ஆனார். பீஸ்ட் படப்பிடிப்பின் போதே ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இயக்குனர்அதற்கான துணுக்குகளை அப்போது கொடுத்து இருந்தார். பின்னர் சன் பிக்சர்ஸ், அனிருத் ,நெல்சன் சூப்பர் ஸ்டார் இடம்பெற்ற ப்ரோமோவை வெளியிட்டு கன்ஃபார்ம் செய்தது.
23
அடுத்து ரஜினியின் 169 வது படமான இந்த படத்திற்கு ஜெயிலர் என பேரிடப்பட்டுள்ளதாக ஒரு போஸ்டரையும் வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம். அந்த போஸ்டரில் கத்தியில் ரத்தத்துடன் ரஜினி அமர்ந்திருப்பது போன்ற போஸ் இருந்தது. இதனால் ஒருவேளை இந்த படம் பேட்ட மாடலில் இருக்குமோ என சந்தேகமும் எழுந்தது.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், சிவ ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். ரஜினிக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் சிவ ராஜ்குமார் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
33
ஜெயிலர் படத்திற்கான திரைக்கதையை பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயற்றியுள்ளார். நெல்சன் உடன் மீண்டும் கைகோர்த்துள்ள அனிரூத், ரஜினி 169 வது படத்தில் இசையமைக்க உள்ளார். கலாநிதி மாறன், நெல்சன், அனிரூத் கூட்டணியில் உருவாகும் இந்த படம் குறித்து எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்துள்ளனர்.
இறுதியாக ரஜினி சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகியிருந்தது. படம் போதுமான வரவேற்பு பெறவில்லை இதனால் நெல்சன் உடன் ரஜினி கைகோர்த்துள்ள படம் குறித்த அதிக ஆவல் எழுந்துள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் படம் குறித்த புதிய அப்டேட்டாக இந்த படம் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் படப்பிடிப்புக்கு வரும் என தெரிகிறது. இதற்காக சென்னைக்கு அருகில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.