rajinikanth next : லைகாவுடன் 2 படம் பட்டையை கிளப்பும் சூப்பர் ஸ்டார்...எப்ப பூஜை தெரியுமா?

First Published | Oct 28, 2022, 8:51 PM IST

லைகா சுபாஸ்கரன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உறுதி செய்துள்ளார். இது குறித்தான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

ரஜினி இறுதியாக நடித்த அண்ணாத்த படம் வெளியாகி மிதமான வரவேற்புகளை பெற்றது. இதில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா ஆகியோரும் இந்த படத்தில் வந்திருந்தனர். படம் விமர்சன ரீதியில் பின் தங்கி இருந்தாலும், ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது இந்த படம். இதை தொடர்ந்து தற்போது பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார்  இயக்கத்தில் ஜெய்லர் என்னும் படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட ஒரு முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது. அனிருத் ரவிச்சந்திரன் தான் இதற்கும் இசையமைக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு...வதந்திகளை ஒப்புக்கொள்ளும் சித்தார்த்.. இதயராணிக்கு பிறந்தநாள் வாழ்த்து


Image: Teaser Still

தலைவர் 169 என்கிற டைட்டிலுடன் துவங்கிய இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருந்தது. படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை ஒட்டி வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

இதையடுத்து ரஜினிகாந்த் அடுத்ததாக சிறுத்தை சிவா உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனத்துடன் இரண்டு படங்களில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...உள்ளாடை தெரிய அமர்ந்து கண்களை கலங்கடிக்கும் திவ்யபாரதி...

jailer

லைகா சுபாஸ்கரன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உறுதி செய்துள்ளார். இது குறித்தான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் பூஜை போட்டு இந்த படங்களுக்கான வேலைகள் துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Latest Videos

click me!