புகழ்பெற்ற மலையாள நடிகரான ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரின் மறைவுக்கு இரங்கள் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், ஸ்ரீனிவாசன் தன்னுடன் படித்தவர் என்பதை கூறியுள்ளார்.
பன்முகத் திறமையாளர் ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். ஏசியாநெட் நியூஸிடம் அவர் தனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார். தனது நெருங்கிய நண்பரின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறினார். 'நண்பர் ஸ்ரீனிவாசன் நம்மை விட்டுப் பிரிந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவர் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் என் வகுப்புத் தோழர். மிகவும் நல்ல நடிகர், அதைவிட மிக நல்ல மனிதர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்' என்று ரஜினிகாந்த் ஏசியாநெட் நியூஸிடம் தெரிவித்தார்.
ரஜினிகாந்தும் ஸ்ரீனிவாசனும் சென்னையின் அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் மாணவர்கள். ரஜினி சீனியர் மாணவராக இருந்தார். இருவரும் படிக்கும் காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இல்லாவிட்டாலும், பின்னர் திரைப்படங்கள் மூலம் இணைந்தனர். ஸ்ரீனிவாசன் இயக்கிய 'கத பறயும்போல்' போன்ற திரைப்படங்களின் கதாபாத்திரங்கள் மூலம் இருவரின் நட்பும் விவாதிக்கப்பட்டது.
22
நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்
மறைந்த நடிகரும் இயக்குநருமான ஸ்ரீனிவாசனின் இறுதிச் சடங்குகள் நாளை காலை நடைபெறும். கண்டநாட்டில் உள்ள அவரது இல்லத்தில் நாளை காலை 10 மணிக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என இயக்குநர் ரஞ்சி பணிக்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்று மதியம் 1 மணி முதல் 3 மணி வரை எர்ணாகுளம் டவுன் ஹாலில் பொது அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும். முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த வருவார்கள். முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என சிபிஎம் செயலாளர் எம்.வி. கோவிந்தன் தெரிவித்திருந்தார்.
டயாலிசிஸ் செல்லும்போது ஸ்ரீனிவாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, திருப்பூணித்துறையில் உள்ள தாலுகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது ஸ்ரீனிவாசனுடன் அவரது மனைவி விமலா இருந்தார். இதற்கிடையில், ஸ்ரீனிவாசனை நினைவுகூர்ந்து அரசியல் மற்றும் சமூகத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஸ்ரீனிவாசனின் மறைவு மலையாள திரையுலகிற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.