'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த மாதம் முழுவதும் சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள, பிலிம் சிட்டி ஒன்றில் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு கடலூர் வந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் நத்தம் பகுதியில் இந்த படத்தின் சண்டை காட்சி, மற்றும் யோகி பாபு நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும் போது அவரை காண வேண்டும் என, நந்தம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டுள்ளனர். வழக்கம் போல் 'ஜெயிலர்' படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு தலைவர் காரில் மாஸ் என்ட்ரி கொடுத்த போது, காரில் இருந்தபடியே ரசிகர்களை பார்த்து கை கூப்பி வணங்கி விட்டு சென்றார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: வடகைத்தாய் சர்ச்சை... விக்னேஷ் சிவன் - நயன்தாரா விசாரணைக்கு அழைப்பா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
அதே போல், இயக்குனர் நெல்சன் திலீப் குமாரும்... உயரமான இடத்தில் இருந்து, ரசிகர்களை நோக்கி கை அசைத்து தன்னுடைய நன்றிகளை தெரிவித்தார். இந்த புகைப்படமும் வெளியாகி உள்ளது.
அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில், ரஜினிகாந்த் ஜெயிலர் மகதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.