சிகிச்சைக்கு பின் சிங்கம் போல் ரெடியான ரஜினிகாந்த்! கூலி ஷூட்டிங்கில் கலந்துகொள்வது எப்போது?

Published : Oct 15, 2024, 09:50 AM IST

சிகிச்சை முடிந்து ஓய்வுக்கு பின் தற்போது மீண்டும் பிட் ஆகி உள்ள ரஜினிகாந்த், கூலி ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ள தேதியை லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

PREV
14
சிகிச்சைக்கு பின் சிங்கம் போல் ரெடியான ரஜினிகாந்த்! கூலி ஷூட்டிங்கில் கலந்துகொள்வது எப்போது?
Coolie Movie

வேட்டையன் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சவுபின் சாஹிர், கன்னட நடிகர் உபேந்திரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மேலும் அமீர்கானும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

24
Lokesh kanagaraj, Rajinikanth

கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றுப்பகுதியில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை ஸ்டிண்ட் வைத்து அகற்றிவிட்டனர்.

இதையும் படியுங்கள்... இளையராஜா இசையில் ரஜினிகாந்த் பாடிய ஒரே ஒரு சூப்பர் ஹிட் பாடல்! எது தெரியுமா?

34
Coolie movie Shooting

2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். ரஜினிகாந்த் முன்கூட்டியே தனக்கு நடக்க இருக்கும் சிகிச்சை குறித்து கூலி படக்குழுவிடம் தெரிவித்துவிட்டதால் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினி தவிர்த்து பிற நடிகர், நடிகைகள் நடிக்கும் காட்சியை படமாக்கி வந்தார். இதனிடையே ரஜினிகாந்த் மீண்டும் கூலி ஷூட்டிங்கில் எப்போது கலந்துகொள்வார் என்பது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

44
Rajinikanth Join in Coolie Shoot

அதன்படி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், கூலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் வருகிற அக்டோபர் 16-ந் தேதி முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் கூலி ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறினார். ரஜினி கலந்துகொண்ட பின்னர் படப்பிடிப்பை விறுவிறுப்பாக முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் கூலி திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். கூலி படத்தை முடித்த பின்னர் கைதி 2 பட வேலைகளை தொடங்க உள்ளார் லோகி.

இதையும் படியுங்கள்...  திரும்பிய பக்கமெல்லாம் ஹவுஸ்புல்; பாக்ஸ் ஆபிஸில் டபுள் செஞ்சுரி அடித்த வேட்டையன்!!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories