சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் சிவா இயக்கத்தில் கடைசியாக நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் வசூல் ரீதியாக முதலுக்கு மோசம் இல்லாமல் கல்லா கட்டிய போதிலும், விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. இந்த படத்திற்கு பின்னர், கண்டிப்பாக அணைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்க கூடிய ஒரு படத்தில் தான் நடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் தீர்க்கமான முடிவில் இருந்ததால், பல இயக்குனர்களிடம் கதைகளை கேட்டு நிராகரித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் கதை கேட்பதை கூட நிறுத்தி விட்டதாக 'ஜெயிலர்' படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அவரே கூறி இருந்தார். பின்னர் நெல்சன் திலீப் குமார், ரஜினிகாந்த்தை சந்தித்து, இப்படத்தின் ஒன் லைன் மட்டுமே கூற, கதை அருமையாக இருக்கிறது. முழு கதையும் கூறுமாறு கேட்டுள்ளார். அதற்க்கு நெல்சன் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு வந்து கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் சொன்னபடி 10 நாட்களில் மீண்டும் ரஜினியை சந்தித்து முழு கதையும் கூற ரஜினிகாந்துக்கு இந்த கதை திருப்திகரமாக இருந்ததால் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் பின்னரே 'ஜெயிலர்' படத்தின் அறிவிப்பு அதிகார பூர்வமாக சன் பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சக்க போடு போட்ட சிவகார்த்திகேயனின் மாவீரன்! ஒட்டு மொத்த வசூலை ஓப்பனாக கூறிய தயாரிப்பு நிறுவனம்!
இப்படத்தில் நடிக்க ரஜினி ஓகே சொன்ன பிறகு, வெளியான பீஸ்ட் படம் தோல்வியை சந்தித்ததால்... சிலர் ரஜினியிடம் இப்படத்தில் இருந்து விலகுமாறு கூறியும், ரஜினிகாந்த் விடாப்பிடியாக நெல்சன் மீது நம்பிக்கை வைத்து நடித்து முடித்தார். அந்த நம்பிக்கை தான்... இன்று வெளியான 'ஜெயிலர்' படத்தின் வெற்றியாகவும் மாறியுள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், வாரிசு படம் அமெரிக்காவில் மொத்தமாக $1,141,590 வசூலித்திருந்த நிலையில், இன்று வெளியான ஜெயிலர் திரைப்படம் முதல் நாளில் மட்டும் $1,158,000 வசூலித்து இருக்கிறதாம். இந்த தகவலை ரஜினிகாந்தின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டு... இது தான் சூப்பர் ஸ்டார் பவர் என்று வைரலாக்கி வருகிறார்கள்.